பக்கம்:இலக்கியக் கலை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a46 இலக்கியக் கலை - இங்கு வண்டு, வட்டாடும் கருவிக்குத் தொழில், வடிவு, வண்ணம் முதலிய. மூன்றும் பற்றி உவமிக்கப்பட்டமை காண்க உயர்ந்த உவமை - கவிதையில் உவமையாக வரும் பொருள் சிறப்புடைய தாகவும். உயர்ந்த கருத்த்ைத் 'தருவதாகவும் இருத்தல். வேண்டும். இதனை ஆசிரியர் தொல்காப்பியனார், "உயர்ந்தத்ன் மேற்றே உள்ளுங்காலை' என்று கூறினார். எக்காரணம்பற்றியும் உயர்ந்த பொருளைத் தாழ்ந்த பொரு ளோடு உவமித்தல் சிற்ந்த கவிதைக்கு ஏற்ற்தன்று. கவியரசர் பாரதியார் கண்ண்ம்ம்ாவின் காதலுக்கு உவமை கூறிக் கொண்டே வருகிறார். சிறந்த பொருளும் மட்ட்மான பொருளும் கலந்து கூறுவதைக் காண்கிறோம் அங்கு 'வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு’ என்று கூறியவர் அடுத்த அடியில் 'பூணும் வடம் நீயெனிக்குக் புதுவயிரம் நானுனக்கு' என்று கூறி மட்டம் ஆக்கி விடுதல்ைப் காண்கிறோம். இங்ங்னம் கூறுவதால் வயிரமும் வடமும் உவமைக்கு ஏற்றவையல்ல என்பது க்ருத்தன்று. இந்த இடத்தில் காதலின் பெருமை பேசப்படும் இடத்தில், விழியும் ஒளியும் வீணையும் நாதமும் பேசப்படும் இடத்தில், இவ்வுவமை சிறப்புடையதன்று என்பதே கருத்து. இதனையே ஜான்சன், சிறந்த உவமை, பொருளின் தன்மையை விளக்குவ் தோடு அதனைச் சிறப்பிக்கவும் வேண்டும் என்று கூறுகிறார். காதல் எல்லாக் கவிஞராலும் பாடப்பெற்ற ஒன்றுதான் ஆனாலும், காதற்சுவையைப் பாடுன்கயில் படிப்பவ்ர் மனத்தை உயர்த்தும் தொழிலைச் செய்வது ஒரு சில புலவர்க்கே இயலுவதாகும். சுத்தரமூர்த்தி நாயனார் பரவையாரைக் கண்டு. காதல் கொள்கிறார். இவர் பார்த்துக்கொண் டிருக்தையிலேயே மன்த்தால் பரவையின் அழகைச் சிந்திக் கிறார். பல உவமைகள் கூறப்படுகிற இப்பாடலில் இவ்' வுவடிைத்ள் அனைத்தும் ஜான்சன் கூறியதுபோன்று புரலுப்ாரின் அழகை விளக்குவதோடு காதலாகிய உணர்ச்

  • }

சிய்ையும் உயர்த்துவதைப் பாட்லால் அறிய முடிகிறது: "கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் ப்ெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணிய்மோ புயல்சுமந்து, விற்குவளை பவளமலர் மதிபூத்த வில்ரக்கொடியோ அற்புதம்ோ'சிவனருளோ அறியேன் என்று அதிசயித்தார்" - - -- . . . . :*: ; ; १ ** !.', பெபு தடுத்தாட் 140)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/265&oldid=751085" இலிருந்து மீள்விக்கப்பட்டது