பக்கம்:இலக்கியக் கலை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகித்தின் வரலாறு 257 கேட்கலாம். ஆன்ால் இன்னது என்று கூறாமையினர்லேயே இவ்வுருவகம் சிற்க்கின்றது என்பதை அறியல்வேண்டும். இளமை பாரார்' என்ற 126-ஆவது குறுந்தொகையில், 'பூங்கொடி முல்லைத் தெர்குமுகை இல்ங்கு எயிறாக, நகுமே தோழி நறுந்தண் காரே என்று கார்காலம் சிரிப்பதாக உருவகிக்கப் பட்டுள்ளமையும் காண்டற்குரியது. இத்தகைய உருவகம் மிகுதியாகக் காணப்பெறுவதில்லை. கார்காலம் நகுமே என்று கூறிய சிறப்பைக் காண்க. நகுதல் என்றால் எள்ளி நகையாடுதல் என்பதே பொருள். கார் நகுமே என்ற தொடரில் நகுமே என்ற வினை காரணமாகக் கார்காலம் ஒரு பெண்ணாக உருவகிக்கப் பெற்றிருத்தலை உணர்கிறோம். கார்காலம் என்ற ஒரு நுண்பொருள் உணர்ச்சியற்றது என்பதையும் மறந்து நாமும் தலைவியைப்போல, அக் கார்காலம் சிரிப்பதாகவே உணருகிறோம் அல்லவா? இதுவே உருவகத்தால் பெற்ற பயன். இந்நிலையில் இவ்வழகிய சொல்லைப் பயன்படுத்திய கவிஞனின் கற்பனைத் திறனை நோக்குவோம். அரிஸ்டாட்டில், "அழகுகளில் அழகு உருவகத்தை நயமாக ஆள்வதே. அது பயிற்சியால் வருவதன்று. மேதையின் அடையாளங்களில் ஒன்று அது' என்று எழுதிய வாக்கியம் நினைவிற்கு வருகிறது. இவ்வாறு அஃறிணைப் பொருளை உயர்திணைப் பொருளாக உருவகித்தலை மேனாட்டுத் திறன் ஆய்வாளர் பாஸ்ானிபிகேஷன் என்று கூறுவர். உருவுக்த்தால் மொழி பெற்ற பயன் உருவகம் கவிதைக்கு அழகு செய்யவே தோன்றியது போலும் என்றுகூடச் சிலர் நினைக்கலாம். தண்டியலங்காரத்தில் உள்ள அணிகளைப் பார்த்தால் இந்நினைவு தோன்றத்தான் தோன்றும் என்றாலும் இதுவரைப் பேசப்பட்ட உவமையும் உருவகமும் கவிதையை அழகு செய்ய மட்டும் தோன்றினவல்ல எேன்பது வெளிப்படைrமுன்னர்க் கூறப்பெற்றபடி தன் கருத்துக்கு விளக்கம் தேடிக் கவிஞன் செய்த முயற்சிகளின் பயனே உருவகம் :முதலியன. நாளடைவில் இவ்வுருவகங்களிற் பல வெறும் புண்புச் சொற்களாக அமைந்து விட்டின. இரண்டு பொருள்கள் தங்கள் இயல்புகளில் ஒத்துக் காணப்பெறுவதாக வைத்துக்கொள்வோம் 'அ' என்ற பொருளும், 'ஆ' என்ற பொருளும், ஒன்றை ஒன்று ஒத்திருப்பதாகக் கொள்வோம். இவ்வொப்புமை, வடிவு, உரு, வினை, பயன் என்ற நான்கில் ஒன்றாக இருக்கலாம் எனத் தொல்காப்பியனாரே,விரிக்கிறார். இவற்றுள் ஒன்றை ஒன்றாகக் இ.-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/276&oldid=751097" இலிருந்து மீள்விக்கப்பட்டது