பக்கம்:இலக்கியக் கலை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகத்தின் தரலாறு 261 மனிதன் உயிர்வருக்கத் தொடரில் தானும் ஒருவன் என்பதை நன்கு அறிந்திருந்தான். உயிரினங்களிடத்துத் தனக்குள்ள தொடர்பை மனிதன் மறக்கவே இல்லை. இயற்கையின் கூறுபாடுகளாக அமைத்த கடல், மலை, யாறு, விலங்கு, மரம் முதலியவற்றை உயிருடைய உயர்திணைப் பொருள்கள் போலப் பேசுமாறு செய்த கவிஞன் ஏதோ கவிதை அழகடைய மட்டும் இம்முறையை மேற்கொள்ள வில்லை உயிர்வருக்கத் தொடரில் இவற்றிற்கும் தனக்கும் உள்ள தொடர்பை அறிந்தே இவற்றையும் உயர்திணை போலப் பேசவைத்தானோ என்றுகூட நினைக்க வேண்டி யுளது. சின்னஞ்சிறு குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு அதனிடம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் இயல்பை அறிவோம். விவரம் அறியாத மிகச்சிறு குழந்தையை வைத்துக்கொண்டு நாம் அதனுடன் பேசு வதையும் அறிவோம். இவ்வியல்பைப் போன்றதே அஃறிணைப் aெtருளை உயர்திணைப் பெரருளர்க்கிப் பேசுமாறும் கேட்குமாறும் செய்யும் கவிஞன் இயவ்பாகும், மேல்நாட்டுக் கவிஞர்களில் ஸ்பென்ஸர், ஷேக்ஸ்பியர், வோர்ட்ஸ்வர்த் முதலியவர்கள் இத்துறையில் மிகுதியும் பயின்றவர்கள். - இவற்றையல்லாத, உயர்வுநவிற்சி, வேற்றுப்பொருள் வைப்பு, தற்குறிப்பேற்றம் முதவிய அணிகளும் தத்தம் அளவில் மிகாது பயன்படுமாயின் கவிதைக்குரிய தோழர்களேயாகும், ! r 1. - 24 : உவுமவியல் 9. 2. மீனாட்சி.பி. தமிழ் 28. 3. Personification 4. தொல் செய்யுளியல்.201. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/280&oldid=751102" இலிருந்து மீள்விக்கப்பட்டது