பக்கம்:இலக்கியக் கலை.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 இலக்கியக் கலை பக்திப் பாடல்கள் அனைத்தும் அவற்றை ஆக்கிய தனிப்பட்ட மக்களின் அநுபவங்கள் என்று கொள்ளாமல் அவர்கள் சமுதாய முழுவதுக்கும் பொதுவான அநுபவங்கள் என்று கூறுகிறார்கள். திருவாசகம் போன்ற நூல்கள் இக்கருத்து எவ்வளவு உண்மை யானது என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. தோணோக்கம், பொற்சுண்ணம், தெள்ளேணம், அம்மானை முதலிய பதிகங்கள் பலர் சேர்ந்து செய்யும் நிகழ்ச்சிகளிற் பாடுவதுபோல் அமைந் திருப்பதும் இவை சமுதாய உணர்வை அறிவுறுத்த எழுந்தவை என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. இவ்வுதாரணங்கள் மூலம் அறியக்கிடக்கும் உண்மை ஒன்றே ஒன்று. அதாவது இக்கவிதை களை ஆக்கும் கவிஞன் தன்னுள்ளே தான் ஆழ்ந்து, புற உலகை மறந்து, அநுபவித்த அநுபவம் காரணமாக இவற்றை ஆக்கினான் என்பதேயாகும். இசைப் பாடல் இவ்வகைப் பாடல்கள் சில இன்றியமையா இயல்புகளைப் பொருந்தி இருத்தல் வேண்டும். இவற்றில் ஒவ்வொரு பாடலும் ஒருதலையாய உணர்ச்சியை மேற் கொண்டே இருத்தல் வேண்டும். அங்ங்ணம் அது கொண்டுள்ள உணர்ச்சி மட்டம்ானதாகவோ செயற்கையான தாகவோ இருத்தல் ஆகாது. மேலும் அது வெளியிடும் உணர்ச்சி, கவிஞனின் அகமனத்திலிருந்து தோன்றிய தாகவும், உண்மையுடையதாகவும் இருத்தல் வேண்டும். அவ் வுணர்ச்சியை வெளியிடும் கருவியாகிய சொல்லும் நடையும் சிறந்தனவாக இருப்பதோடு முன்னுக்குப் பின் முரண்ாமல் இயைபு பெற்று ஒரு க்லை என்று கூறக்கூடிய முறையில் அமையவேண்டும். தாங்கள் கொண்டுள்ள உணர்ச்சி, அநுபவத்தை வெளியிட இந்தத் தொகுப்புப் பாடல்கள் இசையைத் துணையாகக் கொள்ளுதலின் இவற்றை இசைப் பாடல் என்றும் கூறுகின்றனர். பொதுவாக எல்லாக் கவிதைகளுக்கும் இசை உரியதாயினும், இப்பகுதியில் இசை வெறும் ஓசை நயத்தை மட்டும் தாராது கவிதையின் உண்ர்ச்சிய்ையே வெளியிடும் கருவியாகவும் அமைகிறது. இன்றியமையா இலக்கணம் மேலும் இப்பாடல்கள் ஒரு தனிப்பட்ட உணர்ச்சியைத் தாங்கிவ்ரும் தனித்தனிக் கவிகைகள் ஆகலின், அவை மிக நீண்டு இருத்தல் ஆகாது. எத்தகைய சிறந்த் உண்ர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/285&oldid=751107" இலிருந்து மீள்விக்கப்பட்டது