பக்கம்:இலக்கியக் கலை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 இலக்கியக் கலை ஓர் உணர்ச்சி வசப்பட்டு அதன்வழியே செல்கிறான். இவ்வகை உணர்ச்சி ஏற்படுவது உலகியல்பேயாகும். இதன் நியாய அநியாயங் களைப்பற்றி ஆராய இது இடமன்று. இவ்வகையான சந்தர்ப்பத்தில் ஒருவருடைய மனநிலை என்ன வெல்லாம் நினைக்குமோ அவை அனைத்தையும் குறிப்பதே கவிஞன் தொழிலாகும். இவற்றோடு w கவிஞன் கற்பனையையும் கலந்துவிடுகிறான். கேவலம் பொறி உணர்ச்சி மட்டும் உடையவனாகி அவன் பாடுவ தில்லை. கற்பனை கலந்தே பாடுகிறான். எனவே, மேலைநாட்டு இலக்கியங்களில் காணப்பெறும் பொறி உணர்ச்சிப் பாடல்கள் அல்ல. தமிழில் காணப்பெறும் அகப் பாடல்கள். அவர்கள் தொகுதி யில் ஏதாவதொன்றில் சேர்க்கவேண்டுமானால் இவற்றை அவர் களுடைய ரொம்ாண்டிக் பொயட்டரி: என்ற தொகுப்பில் அடக்க லாம். ஆகம புறம் வேறுபாடு இவ்வகையான பாடல்கள் அறிவை ஆதாரமாகக் கொண்டு தோன்றுவதில்லை. அறிவின் பயனாக இவை தோன்றியிருப்பின், இவை யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடியனவாக இருக்கும். உதாரணமாக மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும், விசும்புதைவரு வளியும்,வளித்தலை இய தீயும், தி முரணியதிரும் என்றாங்கு ஜம்பெரும் பூதத்து இயற்கைபோல என்றொரு கவிதை கூறும் பொழுது இது அறிவின் பயனாகவும் அதன் அடிப் படையிலும் தோன்றியது என அறிகிறோம், இதில் அறிவுடையோர் யாருக்கும் கருத்துவேற்றுமை இருத்தற்கில்லை. இவை, காணப்படும் பொருள்களைப்பற்றி அறிவின் உதவிகொண்டு கூறப்பெற்றவை. சுருங்கக்கூறின் இவை மெய்ப் பொருள்கள் பற்றியன. காண்போர் மனநிலைக்கு ஏற்பு இவை மாறுபடுவதில்லை. ஒருவனுடைய பகுத்தறிவு எல்லோருடையதைப் போலவே ஆகும். ஆனால் கற்பனை அவ்வாறில்லை. ஒத்த பகுத்தறிவும் கல்வியும் ஏனைய சாதனங்களும் உடையவர்களிடங்கூட ஒத்த கற்பனையும் அநுபவமும் இருத்தற் கில்லை. அது தனிமனிதன் உடிைழை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/289&oldid=751111" இலிருந்து மீள்விக்கப்பட்டது