பக்கம்:இலக்கியக் கலை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: * ~ * அகமும் புறமும் 271 எனவே இந்த அகப்பாடல்களில் ஒருவனுடைய அநுபவம் நம் அநுபவத்திற்கு ஒத்து வருகிறதா என்று ஆராய்தல் தவறாகும். அகப்பாடல் தோன்றக் காரணம் இவ்வகப்பாடல்களாகிய இசைப்பாடல்கள் புறப் பாடல்கள் தோன்றிப் பன்னெடுங்காலம் கழித்தே தோன்றியிருத்தல் கூடும். தமிழ்நாடு பரப்பில் மிகச் சிறியது. இதற்குள் சேரர் சோழர், பாண்டியர் என்ற மூன்று பெருங்குடிமக்கள் ஆட்சி செய்துள்ளனர். மிகப் பழங்காவந் தொட்டே இவர்கள் ஆட்சி இங்குநிலைபெற்றிருந் திருக்கிறது. இது இலக்கிய வாயிலாக நாம் அறியும் உண்மையாகும். கேல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன் தோன்றி முத்த இம்மூவருக்குள்ளும் ஓயாது போர் நிகழ்ந்து வந்திருக்கிறது. எனவே இவர்கள் ஒற்றுழிையாக வாழ்ந்த நாளே இல்லை எனலாம். எப்பொழுதோ ஒரு முறை இவர்கள் ஒற்றுமை பர்ய் ஒரிடத்தில் இருக்கக் கண்ட் புல்வன் ஒருவன் தன் கண்களையே நம்ப் இயலாதவனாகிய, 'இன்றே போல்ததும் புன்ர்ச்சி என்று பாடிச் சென்றான். எனவே பூசலும், பகைமையும் நிறைந்த இவர் கள் காலத்தில் அடிக்கடி ஒருவரை ஒருவர் வென்று அடிப்படுத்தி ஆட்சி செய்துள்ளனர் எனவும் அறிகிறோம். ஆதிகளிலத்தில் இவ் வகைப் பகைமை, போற்றற்குரியதாக இருந்திருக்கலாம். கவி வாணர்களும் மாற்றிமாற்றி ஒருவரை ஒருவரே புகழ்ந்திருக்கலாம். ஒவ்வொருவருடைய வீரத்தையும், கொடிைன்ய்யும் புகழ்ந்தும் வியந்தும் பாடிய பாடல்கள் புறத்திணை'ப் பாடல்களாக அமைந் எதுள்ளன. , ஆனால் பலகாலம், கழித்து. கவிதை,இயற்றுதற்குக்காரன் மாக இருந்த இவ்வீரமே துன்பத்திற்கும் காரணமாக ஆகி.இருத்தல் வேண்டும். ஓயாது போர் செய்தமையின் வீணான உயிர்ச்சேதம், பொருள் அழிவு வறுமை,முதலியன நிறைந்திருத்தல் வேண்டும். நியாயம், அமைதி, வாழ்க்கை நிலைபேறு முதலியன, இப் புேர் களாலும், பகைமையாலும் அழித்துவிடவே மேலும் வீரம் முதலியனபற்றிப்படையாருக்கு மனம் வரும்; அத்தகைய நிலையில் மனிதமனுத்தின் இயல்பு என்னவாக இருக்கும்? அமைதிலைதாடி மக்கள் இனம் அலைந்திருக்கவேண்டும். புற உலகில் அமைதி அடை வழியே இல்லாத இத்தகைய காலங்களில், புகழ்ச்சிக்குரியனவுத இருந்த வீரம், நாட்டுப் பற்று பகைமை கோபம் முதலிiன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/290&oldid=751113" இலிருந்து மீள்விக்கப்பட்டது