பக்கம்:இலக்கியக் கலை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 273 என்ன? மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழரல்லாததும், தமிழ்மொழி அறியாததுமான க்ளப்பிரர் என்ற ஓர் இனம், தமிழ் நாட்டைப் பிடித்து ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரையில் ஆட்சி செய்தது. அவ்வாட்சியில் தமிழர் அடைந்த துன்பமும், அதிலிருந்து விடுதலையடைய அவர்கள் புற உலகை விட்டு அகஉலகில் அமைதி பெறச் செய்த முயற்சியுமே அன்று சமயகுரவர்கள் தோன்றக் காரணமாயின. இவர்கள் ஆக்கிய கவிதைகளைப் பக்திப்பாடல் என்றும், 19தத்துவப்பாடல் என்றும் கூறுகிறோம், முன்னர்க் கூறிய அப்பாடல் களுக்கும் இவற்றிற்கும் வேறுபாடு ஓரளவு உண்டாயினும் அவற்றி லிருந்தே இவைதோன்றின. இதற்கு உதாரணம் தேடி அதிகத் தூரம் செல்லத் தேவை இல்லை. தமிழ் இலக்கியத்தில் உள்ள கோவை’ என்ற நூல்வகையேபோதும் அவற்றிலும் திருச்சிற்றம் பலக்கோவையார் இக்கருத்தை நன்கு வலியுறுத்தல் அறிதற்குரியது அகத்துறைக்குரிய காதல் பக்திப் பாடலில் இடம் பெறுவதைத் தேவாரம், திருவாய்மொழி என்பவற்றிற் காணலாம். ஆனால் காதல் முழுநூலிலும் இடம் பெறுமாறு செய்யப்பெற்ற நூல் 'கோவை'யாகும். - -- அகப்பாடலின் மறைவு இத்துணைச் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த இப்பகுதிப் பாடல்கள் 12 - ஆம் நூற்றாண்டின் பின்னர்த் தமிழிலக்கியத்தில் மறைந்தொழிந்தன. அந்நிலையில் சமுதாய வாழ்க்கை மீண்டும் உரம் அடைந்தமைக்குக் காரணம் வேற்றவர் ஆட்சி தமிழ்நாட்டில் கால்கொண்டமையேயாகும். பொது எதிரி காரணமாக ஓர் அளவு இனப்பற்று முதலியவை தலையெடுக்கலாயின. புதிதாகத் தோன்றிய கிளர்ச்சிகளும், பதிய மரபுகளும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறலாயின, தனிப்பட்டவர் உணர்ச்சியைக் கவிதைமூலம் வெளியிடுதல் அநாகரிகமாகக் கருதப்பெற்ற காலம் அது. இத்தகைய காரணங்களால் அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்திலிருந்து விடை பெற்றுக் கொள்ளலாயின. . . . . . கையறுநிலையும் அகப்பர்டலே மேற்கூறிய அக்ப்பாடல்கள் வளர்ச்சி அடைந்து பல உருவங்களைப் பெற்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் பல கார்ண்ங்கள் கருதித் தமிழர் 'அகம்' என்ற பிரிவில் - இ.க.-18, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/292&oldid=751115" இலிருந்து மீள்விக்கப்பட்டது