பக்கம்:இலக்கியக் கலை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 இலக்கியக் கலை சேர்க்காமல் புறம்’ என்ற பிரிவில் சேர்த்துவிட்டனர். அப்படிச் சேர்க்கப்பெற்றவற்றுள் முதன்மையானது கையறுநிலை என்பது. மிக நீண்ட அளவில் உள்ள கையறு நிலை ஒன்றும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. தனிப்பட்ட ஒருவன் பெற்ற இழப்பையோ அல்லது ஒரு சமுதாயம் அடைந்த இழப்பையோ உன்னி ஒருவன் வருந்தி அவ்வருத்தத்தைக் கவிதையால் வெளியிடுவதே கையறு நிலை என்று கூறப்பெறும். இழப்பு எவ்வகையானதாக இருப்பினும் இழந்தவன் மனநிலை, சூழ்நிலை என்பவற்றிற்கு ஏற்ப இழப்பின் பயன் பெரிதாகவும் சிறிதாகவும் தோன்றும். தந்தையை இழத்தல் பெரிய துன்பந்தான். அதனால் பிள்ளைகள் அடையும் துயரும் பெரியதுதான். பாரி என்னும் வள்ளலை இழந்து அவன் மகளிர் எல்லையற்ற துயரக் கடலில் ஆழ்ந்துவிடுகின்றனர். உடனே அவர் கள் வருத்தத்தில் ஊறித்திளைத்து ஒர் அவலக் கவிதை தோன்று கிறது. “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்று எறி முரசின் வேந்தர்எம் - குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே." (புறம்-112) ஆனால் இக் கவிதை தனபபடட அவர்கள் பெற்ற வருத்தத் தையும் சொந்த இழவையும் பாராட்டுவதாகவே உளது. இதனைக் கற்பவர்கள் பாரியைப்பற்றி முன்னரே அறிந்திருந்தாலன்றி இதில் உள்ள துயரத்தின் ஆழத்தை அநுபவித்தல் இயலாது. மேலும் பாரி எவ்வாறு பகைவர்கள் சூழ்ச்சியை அறிந்திருந்தும் தனது வள்ளன் மையினால் உயிரைப் பலியிட்டான் என்பதை முன்னரே அறிந் திருந்தால் அல்லாமல் அப்பாடலில் வரும் வென்று எறி முரசின் என்ற சொற்களின் பொருட்சிறப்பையும் ஆழத்தையும் அறிதல் இயலாது. போர்செய்து வெல்ல வகையற்று வஞ்சனையாகப் பாரியைக் கொலைசெய்த பகைவர்களை எள்ளி நகையாடு முகமாக வென்று எறி முரசின் வேந்தர் என்று கூறப்பெறுகிறது. இவ்வகை ஆழ்கை வேதனையிலெழும் நகை என்பர் மேல் நாட்டுத் திறனாய்வாளர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/293&oldid=751116" இலிருந்து மீள்விக்கப்பட்டது