பக்கம்:இலக்கியக் கலை.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 இலக்கியக் கலை இடம் அகன்ற அவர்களுடைய நாடு எவ்வளவு வருந்தும் எனக் கூறுகையில்தான் அவருடைய பரந்த மனப்பான்மை வெளியா கிறது. எனவே கையறுநிலை என்ற இப்பகுதிப் பாடல்கள் இலக்கியத்தில் தனி இடம் பெற்ற ஒரு பகுதி என்பது தெள்ளிதிற் புலனாகும். இவற்றைத் தமிழிலக்கியத்தில் புறப்பகுதிப் பாடல்களிலேயே சேர்த்துள்ளனர். காரணம், சுட்டி ஒருவருடைய பெயரை இது குறிக்கின்றமையே .யாம். என்றாலும் இவை கவிஞன் உணர்ச்சிப் பெருக்கால் உளம் உ ரு கி ப் பாடப்பெற்றமையின் அகப்பாடல்கள் தொகுப்பைச் சார்ந்தவை என்று கூறினுந் தவறில்லை, ஏன் எனில் இவை தனிப்பட்ட மனிதனின் அகமன அநுபவங்களாம். புறப்பாடலின் அடிப்படை இதனை அடுத் துக் t காணவேண்டியது பெரும் பிரிவாகிய புறப்

பிரிவாகும். இப்பகுதியைப் பாடும் கலைஞன் தன்னுள்தான்

அமிழ்ந்துவிடாமல், தன்னைச் சுற்றியுள்ள புற உலகில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறான். அவனுடைய அக உலக நினைவுகள், உணர்ச்சிகள், அநுபவங்கள் முதலியவற்றைக் கூறாமல் புற உலக நிகழ்ச்சிகளையே குறிக்கிறான். இதனாலேயே இதனை மேல்நாட்டர் 'புறப்பாடல் என்று கூறுகின்றனர். இப்பகுதி s யில் நுழையும் கவிஞன் தான் அந்நிகழ்ச்சிகளைப்பற்றி என்ன நினைக்கிறான் என்பதைக் குறிப்பதில்லை. நிகழ்ச்சிகள், அவை தோன்றற்குரிய காரணம், அ வ ற் றி ன் இடையே உள்ள தொடர்பு முதலியவற்றை, தான் அவற்றில் படாமல், பங்கு கொள்ளாமல், புறத்தே நின்று கண்டு கூறுகிறான். நாட்டுப் பாடலும் கதைபொதி பாட்டும் முதன் முதலாக இப்பகுதியில் தோன்றியவை நாடோடிப் பாடல் என்று இன்று வழங்கப்பெறும் சிறுசிறுதுண்டுப்பாடல்கள் ஆகும். ஏதாவதொரு சிறு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சாதாரணமான, புலவர்களால் இவை இயற்றப்பெற்றிருக்க வேண்டும். கவிதைக்குரிய சிறப்புக்கள் இவ்வகைப் பாடல்களில் மிகுதியும். காணப்படாவிட்டாலும், நல்ல முறையில் இவை அமைந் திருக்கின்றன. கேட்பவருக்குக் கருத்தையும் உண்ர்ச்சி யையும் ஊட்டவே இவை தோன்றின. ஆகையால் அச்செயலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/295&oldid=751118" இலிருந்து மீள்விக்கப்பட்டது