பக்கம்:இலக்கியக் கலை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 இலக்கியக்க்லை. மக்களிடையே வழங்கிவரும் கேர்ண பரம்பரைக் கதைகளை’. அடிப்படையாகக்கொண்டே இவை தோன்றி இருத்தல் வேண்டும். இவற்றில் காணப்படும் கதைகள் அவ்வந்நாட்டின் பண்பாட்டை உட்கொண்டிருத்தல் அறிதற்குரியது. х காப்பிய வகைகள் ஏறத்தாழ இவ்வகைப் பாடல்களின் அடிப்படையில் தோன்றியனவே காப்பியங்கள்' எனப்ெெறும் தொடர் நிலைச் செய்யுட்கள். இக்காப்பியங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். கவிதை அழகு அதிகம் இல்லாமல், கூறப்பெற்ற பொருளுக்கு அதிகச் சிறப்பு வழங்க வேண்டிய முறையில் அமைந்துள்ள காப்பியம் ஒன்று. இதனைப் 'பொருட் காப்பியம்' என்று கூறலாம். மற்றொன்று கூறப்பெற்ற பெர்ருளைப்பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் சிறந்த இலக்கியமாகத் திகழ்வது. இதனைக் 'கலைக் காப்பியம் அல்லது இலக்கியக் காப்பியம் என்று கூறலாம். பொருட்காப்பியம் என்ற வகையில் தமிழ்மொழியளவில் ஒன்றும் இன்று கிடைக்கவில்லை. ஆனால் "நிச்சயமாக அவை இருந்திருத்தல் வேண்டும். பொருட்காப்பியம் கதைபொதி பாட்டுடன் மிகுதியும் தொடர்புடையது. • . . . ; சுவைக் காப்பியம் ஆனால் பின்னர்க் கூறப்பெற்ற கலைக்காப்பியம், கவிதைக் கலை நன்கு வளர்ச்சியடைந்த காலத்தில் தனிப்பட்ட மனிதன் ஒருவனது அறிவின் பயனாகத் தோன்றியதாகும். இவ்வகையில் தமிழில் முதல் முதல் தோன்றியது. சிலப்பதிகாரம்'. சிலப்பதிகாரத் தைப் பொறுத்த வரையில் இருந்த குறைபாடு என்னவெனில், அதன் தலைவன் ஆசிரியன் காலத்தில் வாழ்ந்த சரித்திர மனிதனாவான். ஆகவே அவன் வாழ்க்கையைக் காப்பியமாக அமைத்த ஆசிரியனுக்கு இடையூறுகள் பல தோன்றலாயின. கவிஞன் விருப்பம்போல் மெய்ம்மையையும் நிகழ்ச்சியையும் மாற்றி அமைக்க இயலாமல் போயிற்று. அதன் பின்னர்த் தோன்றிய எல்லாக் காப்பியங்களுக்கும்.இந்தத் தொல்லை இல்லை. மேலும் இசைக்கு விரிந்து கொடுக்காத ஆசிரியப்பாவில் இயன்றது சிலப்பதிகாரம். . முதல்முதலாக விருத்தப்பாவில் காப்பியம் செய்த *. பெருமை 鷲輸量 னுகே உரியது. மேலும், இன்று காப்பியத்திற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/297&oldid=751120" இலிருந்து மீள்விக்கப்பட்டது