பக்கம்:இலக்கியக் கலை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுதியிட்டு எல்லை கூற இயலாதாதலின் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடன் வளரலாயின, பிற்காலத்தில் சமூகம் முழு வளர்ச்சி அடைந்த பொழுது இலக்கியம் தோன்றலாயிற்று. இவ்விலக்கியம் வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியமையின் வாழ்வையே படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி ஆயிற்று. இலக்கியம் தோன்றிய காலத்தில் வாழ்க்கை பெரு மாறுதல்களை அடைந்துவிட்டாலும், பழைய அடிப்படையை இலக்கியம் விடாமல் பேசி வந்தது. மேலே கூறிய இரு பிரிவுகளுக்கும் உரிய எல்லைகளை ஒருவாறு இலக்கியம் வகுக்க முனைந்தது; அதை நிறைவேற்றியது. அவ்வாழ்க்கைக்கு இன்றிய மையாததாகிய தலைவன் தலைவி இவர்களின் இன்பத்தை மட்டும் அகப்பொருள் பேச முற்பட்டது. அவ்வின்பம் நீடித்து நடப்பதற்கு மண வாழ்க்கை வேண்டும். அவ்வாழ்க்கை நடைபெறத் துணை யான பொருள் தேடுவதுகூடப் புறத்தின்பாற் படலாயிற்று. ஒருவனும் ஒருத்தியும் கூடி மகிழும் இன்பமும், பிரிந்து அடையும் துன்பமும் அகப்பகுதிகளாகப் பகுக்கப்பட்டன. அவையன்றி மற்ற வாழ்க்கைப்பகுதி முழுவதும் புறப்பகுதியில் அடங்கின. எல்லை காண இயலாத அவ்வின்பத்தைப்பற்றி எவ்வளவு கூறினும் முடிவுறாது. எனவே அதனைப் பல பகுதிகளாக இலக்கியம் பிரித்துக்கொண்டது. இன்பம் என்பது ஒன்றே யாயினும், ஐந்து பொறிகளின் வழியாகவும் அது அநுபவிக்கப் படும் பொழுது ஐந்து விதமாகத் தேர்ன்றுதல் போல, அகவின்பமும் ஒன்றேயாயினும் அது பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டது. - இலக்கிய அடிப்படை இயல்பூக்கங்கள் அதேபோலப் புறவாழ்க்கை முழுவதும் அகவாழ்க்கை நன்கு நடைபெற அமைந்த கருவியேயாயினும், அதுவும் LIGl} பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இலக்கிய வசதி நோக்கித் திணைகளும் துறைகளும் வகுக்கப்பட்டன. இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து இலக்கியம் மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்தது. எனவே தமிழ்ப் பாடல் களில், அதுவும் சங்ககாலப் பாடல்களில் காதலும் வீரமும் மிகுதியாகப் பேசப் படுகின்றன என்றால், அதன் கார ணம் எளிதில் அறியக்கூடியதே. மனிதனுடைய இரண்டு, தலையாய உணர்ச்சிகள், 'உடைமை இயல்பூக்கம் தற்தரப்பு இயல்பூக்கம். என்பவைகளாகும். முன்னையதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/307&oldid=751132" இலிருந்து மீள்விக்கப்பட்டது