பக்கம்:இலக்கியக் கலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் : ஒரு வரையறை #5 என்பது யாது?’ எனும் வினாவினை எழுப்பி அதற்கு அவரே விடையும் தந்துள்ளார். “மனிதர்கள் வாழ்க்கையில் சிறப்பாகக் கண்டவை, அனுபவித்தவை எவையோ? நம் எல்லார்க்கும் பன்னெடுங்காலத்திற்குப் பிறகும் கவர்ச்சி ஊட்டுவன எவையோ? காலந்தோறும் கவிஞர்கள் சிந்தித்து வருகின்றவை எவையோ? உணர்ந்தவை எவையோ? அவற்றை எல்லாம், அறிவிக்கும் உயிர்த்துடிப்புடைய பதிவேடே இலக்கியமாகும்’ எனும் விளக்கம் நம் கருத்தைக் கவருவதாகும். இந்த விளக்கத்தின் மூலம், மொழி என்னும் கருவி வாயிலாக வெளிப்படும், வாழ்க்கை' அனுபவமே இலக்கியம் என்பது தெளிவாகிறது. செய்யுள், உரைநடையில் அமையும் கலைப்படைப்பு "இலக்கியம்’ எனும் சொல்லை, இந் நூலில் என்ன பொருளில் பயன்படுத்துகிறோம்? எனும் வினாவினை Grații jih Gu estu. GLÊiațań (David Daiches) "செய்யுளிலோ, உரை நடையிலோ படைக்கப்படும் எந்த வகையான கலைப் படைப்பையும் இலக்கியம்' எனப் போற்றலாம். அதனுடைய ‘Quotinhabidgour' (Realism) எடுத்துரைப்பது அன்று. ஒரு கதையைச் சொல்லுவதும் புதியதாகப் படைக்க உதவும் கற்பனைத் திறனால், சொற்களின் மூலம் செஞ்சொற் கவியின்பம் ஊட்டு வதும் இலக்கியத்தின் நோக்கமாகும்' என்று தெரிவித்துவிட்டு உடனே 'இது இலக்கியத்தி ற்குத் தரப்படும் செம்மையான வரையறை அன்று' எனவும் அவரே அறிவித்துள்ளார். இந்த விளக்கத்தில் ஒரு புதுமைப்பண்பு இடம் பெற்றிருக் கிறது. கதையைக் கிளத்தலாகவும் அமைவது இலக்கியம் எனும் புதிய கருத்தைக் காணுகிறோம். இந்நூற்றாண்டில் உரை நடையில் பெருவளர்ச்சி பெற்றுள்ள சிறுகைத, புனைகதை (Fiction) L1667th (Novel) ஆகியவற்றையும் இலக்கியமாகக் கொள்ளுதல் வேண்டும் எனும் எண்ணப்போக்குடன் இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. . . சமுதாய நிறுவனம் சமூக இயல் கண்ணோட்டத்தில் இலக்கியத்திற்கு விளக்கம் தரப்பட்டுள்ளமை அடுத்து நோக்கத்தக்கதாகும். இல்க்கியத்தைப் பொதுவாக ஒரு சமுதாய நிறுவனமாகக் கருதுகின்றனர். 'பேச்சு மனிதனால் வெளிப்படுத்தப் படுவதைப்போன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/31&oldid=751135" இலிருந்து மீள்விக்கப்பட்டது