பக்கம்:இலக்கியக் கலை.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 - இலக்கியக் கல்ை தயார் செய்து கொள்கிறான். புறத்திணையில் பேசப்படும் போர்த ளெல்லாம் இவ்வகையைச் சேர்ந்தனவே. தன்னையும், தன் சமுதாயத்தையும், நாட்டையும் காத்துக்கொள்ளத் தமிழன் செய்த போர்கள் பல அவை வெட்சி, வஞ்சி முதலிய திணைகளில் நன்கு விரிக்கப்படுகின்றன. வெறும் போர் அளவில் வாழ்க்கை நின்றுவிடவில்லை அல்லவா? போர் செய்து வெற்றிகண்டு அமைதியை நிலைநாட்டிய பிறகு, நன்கு வாழும்வகை கூறப்படு கிறது பாடாண்திணை முதலியவை சமுதாய வாழ்க்கையை நன்கு விளக்குகின்றன சமுதாயத்திற்குப் பெருநன்மை செய்தவன் பெரிதும் புகழை அடைகிறான். அவன் அடையும் புகழ்ச்சி பிறருக்குத் தூண்டுதலாய் அமைகிறது. உலகவாழ்க்கைக்கு அப்பாலுள்ள உண்மைப்பொருள்களைப்பற்றிக் கூறும் இடமும் புறமே. புறத்திணை இயலுள் கொடிநிலை, கந்தழி போன்ற இவையும் இடம் பெற்றன; இப் புறத்திணையியலுள் காணப்படும் 'சிறந்த திணைகளுள் ஒன்று காஞ்சித்திணை. இதனை தொல்காப் பியனார் வாகைத்திணையின் பின்னர் வைத்திருக்கிறார். வாகை யால் வந்த ஆணவம் மனிதனை எளிதில் பற்றக்கூடியது. அவ்வாணவம் தலையெடுக்க நினைக்கையில் காஞ்சித்தினை - தோன்றுமாறு வைக்கிறார். காஞ்சித் திணையாவது நிலையாமை யைப்பற்றி அறிவுறுத்துவது. உலகில் மனிதனாகப் பிறந்த ஒருவன், செம்மையான வாழ்க்கை வாழ்ந்து, கண்டார் அஞ்சும் வீரம் உடைவனாய்த் திகழ்ந்து நல்ல புகழை எய்திய நிலையில்தான், அவன் நிலையாமையை உணரவேண்டும். நிலையாமையை நன்கு உணர்ந்தால் உலகில் புகழை நிலைநிறுத்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அது கருதியே காஞ்சியின் பின்னர்ப் பாட்ாண்திண்ை வைக்கப்பட்டது பேர்லும். இவ்வாறு உலக - வாழ்க்கையைப் புறத்திணையியல் நன்கு அறிவிக்கிறது. இதனை நன்கு உணர்ந்த பின்னரே மனிதன் வாழ்க்கைக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்கிறான். பூக்கமும் ஒன்று. அவ்வுணர்ச்சியைவழிப்படுத்தலையே இல்வாழ்க்கை என்று கூறுகிறோம். இயல்பாக உள்ள இவ்வுண்ர்ச்சி அடக்கி ஆளப் படர்தபோது மனிதனை விலங்காக ஆக்கிவிடும். மனத்தித்துவம் நன்குணர்ந்த தமிழர் இவ்வுணர்ச்சியின் தன்மையை நன்கு உணர்ந்த

  • - " - மனித இயல்பாக அரும்புகிற இயல் பூக்கங்களுள் கோம இயல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/311&oldid=751137" இலிருந்து மீள்விக்கப்பட்டது