பக்கம்:இலக்கியக் கலை.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை, இலக்கியம், இலக்கணம் 293 தோடு இதனை அடக்கி ஆளும் வகையையும் சுறிப்போயினர். உலகைப் புறத்திணை இயல் மூலம் நன்கு அறித்த பிறகு இல்வாழ்க் கையில் ஈடுபடுகிறான் தலைவன், அவ்வாழ்க்கை களவில் தொடங்குகிறது. பெரும்பாலும் செம்மையான மனநிலையுடையர்ருடைய வாழ்க்கையை அடிப் படையாகக் கொண்டே களவியல் கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு சில "கிலையிகத மனங்களும், 'நிலை குறைந்த மனங்களும் உள்ளன அல்லவா? அவற்றின் வாழ்க்கை பற்றியும் இங்கு இலக்கணம் கூறப்படுகிறது. காதல் உணர்ச்சியில் ஈடுபட்டோர், அவ்வுணர்ச்சிக்குத் தாம் தலைவராவது போக அடிமையாகி விடுதலும் உண்டன்றோ? அத்தகைய நிலையைப்பெறும் தவறு. என்று கருதுவதற்கில்லை. அவைபற்றியும் இலக்கணம் வருகிறது. இக்களவு நிலை கடந்த பின்னர்க் கற்பியல் வருகிறது. களவில் இருந்த தலைவனும் தலைவியும் அமைதியை அடைந்து இல்லறம் நடத்துகின்றனர். களவில், தம்மையும் தம் இன்பத்தையும் அல்லாமல் வேறு பொருளைக் கனவிலும் நினையாதிருந்த இவர்கள் தம்மை மறந்து, உலகையும் காண முற்படுகின்றனர் இப்பொழுதும். தலைவனுக்கு உரிய கடமைகளும் தலைவிக்கு உரிய கடமைகளும் வகுத்து உரைக்கப்படுகின்றன. இல்லறம் என்பது பிறர் பொருட்டாக வாழும் வாழ்கை என்பதை இருவரும் உணர் கின்றனர். - - * - - அடுத்துத் தோன்றுவது பொருளியல். வாழத் தொடங்கு முன்னர், தலைவன் தலைவி இருவருக்கும் செயல் பெரிதாகக் காணப்பட்டதே தவிர்ச் செயலின் அடிப்படையில் உள்ள கருத்தைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. இல்லறம் நடத்திப் பலரோடு கலந்து வாழ முற்படுகையில்தான் பிறர் கூறும் சொற். களுக்கும் செய்யும் செயல்களுக்கும் பொருள் வேறாய் இருத்தல் கூடும் என்பதை உணர்கின்றனர். பொருள் என்று கூறப்படும் இது ஒவ்வொருவர் சொல்லிலும் செயலிலும் ஆராயப்படவ்ேண்டும். இதனையே பொருளியல் விரித்துக் கூறுகிறது. உதாரணமாக ஒன்றை நோக்குவோம் வாழ்க்கை நன்கு நடைபெற வேண்டுமே யாயின் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் இணங்கி நடந்தே தீர் வேண்டும். வீட்டைப் பொறுத்தமட்டில் தலைவியே உரிம்ை: உடையவள் என்பதைத் தமிழன் உணர்ந்தவன். வீட்டினுள் அவள் வைத்ததே சட்டம் என்பதை அறிவிக்கப் போலும் இல்லாள்" என்ற ஒரு சொல்லை ஆக்கித் தந்து, அதற்கு எதிரான ஆண்பாற் சொல்லே இல்லாமற் செய்துவிட்டான். இந்த இடத்தில் மாத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/312&oldid=751138" இலிருந்து மீள்விக்கப்பட்டது