பக்கம்:இலக்கியக் கலை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* விதை பிறந்த கதை 299. வரிப்பாடல்கள். .. இனி இதனை அடுத்துத் தோன்றுவது வரிப்பாடல் களாம். இதன்ைக் கருத்தறிவிக்குப்பாடல்கள் எனக் கூறலாம். இவ்வரிப் பாடல்களில் அநேகமாக இருவர் சேர்த்து பாடு தலைக் காண்கிற்ோம். பெரும்பாலும் இவர்கள் ஒத்த நிலையிலுள்ள அறிவும், பிற தகுதிகளும் உடையவர்களா கவே இருப்பர். கோவலனும் , மாதவியும் கர்தலர்கள். அவர்கள் கடல்துறையில் அமர்ந்திருக்கும் பொழுது காதல் என்ற பொது உணர்ச்சியால் தூண்டப் பெறுகிறார்கள். உடனே பாடல் பிறக்கிறது. இங்கே பொதுப்படையான சமுதாய உணர்ச்சி ஒன்றும் இல்லை. இவ்வரிப்பாடல்களை, :மனிதர்கள் மனத்தில் தோன்றும் உணர்ச்சிக்கு بالتالاتهي வடிவு கொடுக்கும் நிலையில் முதல் முயற்சி என்று கூறலாம். குன்றக் குரவைப் பகுதியில் தலைவியும் தோழியும், சேர்ந்து பாடுவதும் இவ்வகையைச் சேர்ந்ததேயாம். இப் பகுதிகள் சமுதாயப் பாடல்: போன்ற இன உணர்ச்சியும் அகப் பாடல் போன்று தன் மனத்தைத் தானே ஆய்ந்து கவிதை' புனையும் தன்னுணர்ச்சியும் இல்லாமல் இடை நிகர்த்தவாய் இருத்தல் அறிதற்குரியது. தலைவன் மன நிலையை அறியும் தலைவி உணர்வும், தலைவியை அறியும் தலைவன் உணர்வும் இங்கு வெளியாகின்றன. சமுதாய உணர்ச்சிக்கு மாறாக, இவ்வகைப் பாடல்களின் அடிப்படிை ஒருவர் கூறும் வரிப்பாடல் இதனை அடுத்த நிலையில் ஒருவரே கூறும் வரிப்பாடல். வளர்ந்திருக்கவேண்டும். ஊர்சூழ் வரி இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு: எல்லையற்ற உணர்ச்சி காரணமாக வெளி வருவது இப்பாடலாகும். கணவனை இழந்த கண்ணகி கூறுவதாக அமைந்துள்ள கீழ்வரும் பாடலைக் காண்க. காதற் கணவனைக் காண்பேனே ஈதெர்ன்று காதற் கணவனைக் கண்டால் அவன்வாயில் திதி நல்லுரை கேட்ப்ேனே ஈதொன்று, -. - > - (சிலம்பு: 19.10.13) கருத்தின் மேல் கருத்து வேகமாக எழாமல் உள்ள இடம் இது எல்லையற்ற உணர்ச்சி காரணமாக, கருத்துக் கள் மெதுவாக வெளிவருகின்றன. பலமுறை திருப்பித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/319&oldid=751145" இலிருந்து மீள்விக்கப்பட்டது