பக்கம்:இலக்கியக் கலை.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 இலக்கியக் கலை திருப்பி ஒரே கருத்து வருதலும், அதே சொற்கள் ஆளப் படுதலும் இவ்வாறு நினைக்க இடம் தருகின்றன. சிலப் பதிகாரத்தில் காணப்பெறும் கானல் வரி சிறந்த கலையாக இருப்பது. ஆனால் இவ்வரிக்கு முன்னர்த் தோன்றிய வரிப் பாடல்கள் இத்தகைய சிறப்புப் பெற்றிருக்கக் காரணம் இல்லை. ஏன் எனில் இங்கு நாம் கண்ட வரிப்பாடல் நல்ல கலைஞன் ஒருவனால் இயற்றப்பெற்றதாகும். ஆனால் அக்கலைஞன் மரபுபற்றித் தான் ஒருவனே இவ் வளவு பாத்திரங்களாகவும் இருந்து இப்பாடல் வடிவை அமைத்தாலும், தனது கலை உணர்வால் சிறந்த கவிதை களாக ஆக்கிவிட்டான். எனவே அவனுக்கு முன்னர்த் தோன்றியவை. நாம் முற்கூறியபடிக் கூட்டமாக நின்று மக்கள் உணர்ச்சியால் தூண்டப்பெற்றுப் பாடப்பட்டவையே ஆகும். . உதிரிப்பாட்ல் இதற்கும் பலகாலங் கழித்தே தனிப்பட்டவரால் இயற்றப்பெறும் கவிதைகள் தோன்றிருத்தல் வேண்டும். இதுவரைத் தோன்றிய வரிப்பாடல், குரவைப்பாடல் என்ப வற்றில் காணப்பெறாத ஆழமான கருத்துக்களும், சொல் நயம் பொருள்நயம் முதலியனவும் இப் பிற்காலக் கவிதை களில் தோன்றலாயின. முன்னர்க் கூறப்பெற்ற பாடல்கள், கலை என்ற பெயரைப் பெறக்கூடிய சிறப்பு வாய்ந்தன அல்ல. . - - -- - :કે - - د : '..: ..ۀ . : --. இறுதியாகப் பிறந்த கவிதை தனிப்பட்டவர்களால் பாடப்பெற்றவையாகும். அவற்றை அகப்பாடல், புறப்பாடல் என்று கூறலாம். இந்நிலையில் கவிதை பிறருக்குப் பயன்படுவதாகிறது கவிஞன் தான் பெற்ற உணர்ச்சி யைப் பிறரும் அடையவேண்டும் என்ற குறிக்கோளோடு கவிதை புனைகிறான். அம்முயற்சியில் வெற்றிபெற்றுத் தன் உணர்ச்சியைத் தன் கலைமூலம் பிறருக்கு அளிக்கும் அந்நிலையில் அவன் சிறந்த கலைஞன் ஆகிறான். தன் இன் பத்தை வெளியிடுதல், ஒன்றையே காரணமாகக்கொண்டு தோன்றிய மேற்கூறிய பாடல்களிலும் இக்கவிதை வேறு பட்டதாகிக் கலை என்னும் பெயர் தாங்குகிறது. இல்வாறு தோன்றியவற்றைத் 'தனிப்பட்டவர் 1ить ф” என்று கூறலாம். தனிப்பட்டவர்கள் இயற்றிய பாடல்கள் முற். கூறிப் அகிம், புறம் என்ற இருபெரும் பிரிவுகளானமையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/320&oldid=751147" இலிருந்து மீள்விக்கப்பட்டது