பக்கம்:இலக்கியக் கலை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 இலக்கியக் கலை அதாவது ஒருவன் துயரமாகிய உணர்ச்சியில் ஈடுபட நேரும் பொழுது அவனுடைய அறிவு மறைந்துவிடுகிறது. அவனே அவ்வுண்மையை அறிந்து எவ்வளவு முயன்றாலும் அவ்வறிவை வெளிக்கொணர முடிவதில்லை. உணர்ச்சி மேலெழும்பொழுது அறிவை அடக்கித்தான் தான் மேலெழும்புகிறது. எனவே, ஒன்று மேம்பட்ட காலை ஏனையது தாழ்ந்து நிற்றல் உறுதி. தகுதியும் அநுபவமும் இவ்வுணர்ச்சியின் மற்றெரு செயலும் ஆராயத்தக்கதாம். தந்திச் சேவகன் ஒரு தந்தியை நம்மிடம் தருகிறான். மிக நீண்ட தூரத்தினுள்ள அஞ்சல் நிலையத்திலிருந்தே அவன் அதனைத் தர்ங்கி வருகின்றான். அதனுள் இருக்கும் செய்தி என்ன என்பதுகூட அவனுக்குத் த்ெரிந்திருக்கலாம். என்றாலும் என்ன? ஒருவிதமான உணர்ச்சியும் இன்றியே அவன் அதை நம்மிடம் தருகிறான். ஆனால், அதைப் பிரித்து அதிலுள்ள எழுவாய் பயனிலையற்று வாக்கியத்தைப் படித்தவுடன் நம்மை நாம் மறக்க நேரிடுகிறது. அதிலுள்ள செய்தி மகிழ்ச்சிச் செய்தியாயின் மகிழ்ச்சிக் ஈடிலுள்ளும், துயரச் செய்தியாயின் துயரக்கடலுள்ளும், ஆழ்ந்து விடுகிறோம். காரணம் என்ன? தந்தியைப் பெற்றெடுத்துக் கொணரும் அவன் ஒன்றும் பெறாதிருக்க அத்தந்தி நம்மை மட்டும் துய்ரக் கடலுள் ஆழ்த்துவதின் கருத்தென்ன? அதிற் கூறிய செய்தியைப்பெற நாமே தகுதியுடையவர்களாய் உள்ளோம். நமக்கும்.அதற்குமே தொடர்பு இருக்கிறது. எனவே, தொடர்பு டைய நம்மை அது துன்புறுத்துகிறது. தொடர்பற்ற அவனை (தந்திச் சேவகனை) ஒன்றும் செய்வதில்லை. இவ்வுதாரணத் தினின்றும் ஓர் உண்மை புலப்படுகிறது. ஒரு செயலோ, அச்செயல் பற்றியே அறிவிப்போ நம்மை உணர்சசிக் கடலுள்.ஆழ்த்த வேண்டு மாயின் அச்செயலுக்கும் நமக்கும் தொடர்பு இருத்தல் வேண்டும். அம்மட்டோடு இல்லை. அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையும் நமக்கு வேண்டும். அது என்ன மன நிலை: அதாவது, மேலே கூறிய தந்தியே யாருக்கு வந்ததோ அவன் மயக்க முற்றிருக்கும்போதோ அல்லது பைத்தியம் பிடித்திருக்கும் பொழுதோ, வந்து சேர்ந்தால் அவனை ஒன்றும் உணர்ச்சியில் ஆழ்த்துவதில்லையல்லவா? எனவே ஒரு சொல், அல்லது செயல் பற்றிய அறிவிப்பு:நம்மை ஆட்கொள்ள வேண்டுமாயின், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம்மிடத்து இருக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/326&oldid=751153" இலிருந்து மீள்விக்கப்பட்டது