பக்கம்:இலக்கியக் கலை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 26 கவிதையும் மக்கட் பண்பும் ஐயங்கள் இத்நாட்களில் கவிதை என்று கூறியவுடனேயே சில முடிபுகள் பலர் மனத்தில் தோன்றுகின்றன. u:r(Sprit. வேலையற்றவன், இயற்றிய சில வரிகள். நிரல்படக் கோக் கப்பட்டு, ஒசை அமையச் செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அவை வாழ்க்கைக்குப் பயன்படமாட்டா. வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை அப்படியே எடுத்துக்கூறும் இயல்பும் கவிதைகளுக்கில்லை. காரணம், அவற்றை ஆக்கும் கவிஞனும், வாழ்க்கையை உள்ளவாறு உணரமுடியாமல், ஏதோ கனவுலகத்தில் வாழுபவனாகவே இருக்கிறான். எனவே அவன் ஆக்கும் கவிதைகளும். கற்பனைக்கும், கனவுக்கும் எட்டுபவையாக இருக்கின்ற னவே தவிர உண்மையுடையனவாக இல்லை. மேலே கூறிய முறையில் பலர் கூறுவ்தைக் கேட்கிறோம். ஆனால் இவை சரிதானா என்று நின்று ஆராய்வார் ஒருவரும் இல்லை. ஓரளவுக்கு மேற்கூறிய வினாக்களை ஆராய்வோம். கவிதை வேலையற்றவன் ஆக்கினதுதான். என்ன வேலை அற்றவன் அவன்? நம்மைப்போல் காலையில் எழுந்ததிலிருந்து பொருள் வேட்டை யாடுவதையே வேலையாக அவன் கொள்ளவில்லை என்பது உண்மைதான். விரும்பியோ, விரும்பாமலோ வயிறு வளர்ப்பதற்காக ஒரு வேலையை மேற்கொள்கிறோம். கண்ணுங் கருத்தும் அவ்வேலையிலேயே செலுத்தப்படுகின்றன. ஏன்? *g€frGš5r வயிற்றுக்காக நாம் படும் பாடு சற்றல்ல ? இத்தகைய வேலை கவிஞனுக்கு இல்லைதான். அடுத்துக் கூறப்படும் தகவல், நிரல்படக் கோத்து, ஒசை அமையச் செய்யப்பட்டிருக் கின்றன. கவிதைகள் என்பது இது அப்படியே ஒத்துக் கொள்ளப்படவேண்டிய தொன்று. சொல்லவந்த கருத்தைச் சிறந்ததும், அழகுடையதுமான சொற்களால். சிறந்த முறையில் கூறுவதே கவிதையாகும். ஒசை அமையச் செய்யாவிட்டால் அது கவிதையாகாது. மூன்றாவதாக உள்ள குறை கவிதை வாழ்க்கைக்குப் பயன்பட்மாட்டாது என்பதாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/334&oldid=751162" இலிருந்து மீள்விக்கப்பட்டது