பக்கம்:இலக்கியக் கலை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 இலக்கியத் கலை இப்பண்பு நாம் உலகில் காணாதது என்ற முடிபுக்குக்கூட ஆந்து விடுவோம். ஆனால், மனத்தின் ஆழத்தில் நம்மிடையே ஒளிந்து கொண்டிருக்கும் பண்பாகவும் இருக்கக்கூடும் அது, அதனைக் கவிஞன் எடுத்துக் காட்டிய பின்னரே நாம் அறிதல் கூடும். சில சமயங்களில் நம்மிடையே காணப்படாத பண்புகளைப் பற்றியும் கவிதை கூறல் கூடும். ஆனால் அங்ங்ணம் கூறுவதற்கு ஒரு சிறந்த காரணமும் உண்டு. மக்கட் கூட்டத்திற்கு இப்பண்பு - இன்றியமையாதது. எனக்கவிஞன் ஒன்றை நினைக்கிறான், நோயுற்று வருந்தும் மனித சமுதாயம், அப்பண்பை மேற் கொண்டால் அத்தீங்கினின்று விடுபடல் கூடும் எனக் கவிஞன். நினைப்பானேயாகில், அ த ைன க் கவிதையில்ஏற்றிப் பாட்ாதிருத்தல் கூடுமோ? அதனைக் காணுகிற நமக்கு அவன் கூறுவது பொய்யோ என்ற ஐயங்கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை பல சமயம் கற்பனையைக் கடந்ததாக உள்ளது என்பதை மறந்து விடுதல் ஆகாது. எனவே அவன் கூறுவது வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படக் கூடியதாகவே உளது. யாருடைய வாழ்க்கைக்கு? உயரிய வாழ்வு வாழவேண்டும் என்று நினைப்பவனுடைய வாழ்க்கைக்கே! கவிஞன் காட்டும் வாழ்க்கை இனி அடுத்து வருகிற ஐயம், கவிஞன் வாழ்க்கையை உள்ளவாறே எடுத்துக் காட்டுவதில்லை என்பதாகும். வாழ்க்கையை உள்ளவாறே எடுத்துக்கூறினால் அது புரட்ப் புத்தகத்தில் கூறப்படும் ஒரு பாடமாகுமே தவிரக் கவிதையா ாது. எனவே முற்கூறியபடி வாழ்க்கை எவ்வாறு இருந்தால் நலம் என்று கவிஞன் கருதுகிறானோ அவ்விதமே கவிதையை ஆக்குகிறான். இத்லும் அவன் காணுகிற கனவுகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், அக்கனவின் அடிப்படை, உலகமக்களின் வாழ்விலிருந்தே தோன்றுகிறது. மனிதமனம் பல்வேறு பண்புதலுரின் கூட்டுறவால் ஆயது. அவற்றுள் சில அவனுக்குத் தீமையையும் பல நன்மையையும் செய்கின்றன. தீய பண்புகள் செய்கிற தீமையின் அளவை நாம் நன்கு அறிய இயலாது. கவிஞன் கவிதையில் இதனை அமைத்துப் பாடுகையில்தான் அதன் ஆழத்தை அறிய இயலுகிறது. தீமையாகிய பண்பை ஏன் இவ்வளவு மிகைப்படுத்திக் காட்டி வேண்டும்? அங்ங்ணம் காட்டுவதும் அதனை மக்கட் பண்பிலிருந்து போக்குவதற்கேயாகும். உதாரணமாக ஒன்றைக் *րացւոլն։ காதல் சிறந்த்தாயினும், அது தவறான் நெறியிற் சென்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/336&oldid=751164" இலிருந்து மீள்விக்கப்பட்டது