பக்கம்:இலக்கியக் கலை.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் மக்கட் பண்பும் 321 தன் கற்பனையின் உதவி கொண்டு விரித்துக் காண்கிறான். இத்தகைய பண்பு உலகம் முழுவதும் காணப்பட்டால் உலகம் எவ்வளவு உயர்ந்த இடமாக ஆகும் எனக் கனவு காண்கிறான். அக் கனவில் முகிழ்த்த பயனே கவிதையாகும். இத்தகைய ஒரு கவிதை வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்ற வினா பயனற்றது. அவரவர்கள் மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் ஓர் உணர்ச்சியை அது தட்டி எழுப்புகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் எழுப்பப்பட்ட அப்பண்பை மே லும் மேலும் வளர்ப்பதோ, அன்றி அழியுமாறு விட்டுவிடுவதோ, தனிப்பட்ட மனிதர் கையிலுள்ள வன்மையைப் பொறுத்ததாகும். - ஒன்று மட்டும் அறிதற்குரியது. கவிதையின் தலையாய நோக்கங்கள் இரண்டு. ஒன்று படிக்கும்பொழுது இன்பம் ஊட்டல் அம்மட்டோடு நின்றுவிட்டால் கவிதைக் கலைக்கும் ஏனைய கலைகட்கும் வேற்றுமை இன்றாய் முடியும். எனவே உயர்ந்த தாகிய கவிதைக் கலை மற்றொரு செயலையும் செய்ய முன்ை கிறது. அது என்னவெனில் மக்களிடம் காணப்படும் நற்பண்பு களை வளர்ப்பதாகும். இதுபற்றி இன்னுஞ் சற்று விரிவாகக் காண்போம், - - - 1. w.н. Hudson. Introduction to the study of Literature. P.91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/341&oldid=751170" இலிருந்து மீள்விக்கப்பட்டது