பக்கம்:இலக்கியக் கலை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 ®ಉಹನಿಟಕಿ ಹಣನ கூறப்போனால், அப்படிக் கவிதைக்குப் பொருள் காண்பதே த்வ்று. கவிதையின் பொருளை அச் சொற்களாலேயே அல்லாமல் வேறு சொற்களால் கூறக் கூடுமேயானால் கவிஞனே அவ் .ே வ று சொற்களைப் பயன்படுத்தி இருப்பானல்லவா? கலைஞன் எதுபற்றிப் பேசினாலும் சரி நமக்கு அதுபற்றிக் Ꮬ ©ᎫᎶᏈᏱ & வேண்டா. எவ்வாறு அது கலையாக்கப் பெற்றது என்பதுதான் நாம் காண வேண்டுமே தவிர ஏன் என்ற கேள்விக்கு இங்கு இடமே இல்லை. கலை இன்பத்தை அடையச் செல்லும் வழியன்று; அதுவே இன்பத்தருவதாகும், இன்பம் ஒன்றையே தரும் நோக்குடன் ஆக்கப் பெற்ற கலையில் அவ்வின்பத்திற்குப் அறம்பான குறிக்கோள், நீதி அறம் முதலியவற்றைக் கலைஞன் புகுத்துவதும் தவறு; அவ்வாறு ஒரு வேளை அவை இருப்பினும் அவற்றில் நாம் கவனம் செலுத்துவதும் தவறு. கலையை அனுபவிக்கத் தொடங்கிய நாம் இவற்றில் கவனம் செலுத்தினால் கலையால் பெறும் இன்பத்தை இழந்துவிடுவதுடன், எதைக் கலை தாங்கி நிற்கவில்லையோ, அதை அங்கே தேடித்திரியும் தவற்றையும் இழைத்தவர் களாக ஆகிவிடுவோம். எனவே அச் சிறந்த கவிதையை அனுபவிப்பதைத் தவிர வேறு பயனைக் கருதல் தவறு என்பதே அவர்கள் கொள்கை. - இன்பந்தருவது எது? இதுவரையில் இக் கொள்கை சரியானதே. ஆனால் இதை எல்லை கடந்து இன்னும் வளர்த்துக்கொண்டே போன்ால் தவறாக முடிந்துவிடும். ஓர் எல்லையில் இன்பத்தைத் தரும் பகுதி எது என்ற வினா தோன்றியே தீரும். சொல் அமைப்பும் ஒசை அழகுமே அவற்றைத் தருகின்றன என்றும் இவர்கள் வர்தாடுவர். கவிதையில் கூறப்படும் பொருளைப்பற்றிக் கவலைப்பட வேண்டு வதில்லை, என்றும் கூறுவர். பொருளைப்பற்றிக் கவலைப் படுவதானால், அது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்டவருங்கூடக் கவிதையை அநுபவிக்க வேண்டு மென்றால், பொருளைப்பற்றி அதிகம் கவலைப்படக் கூடா தென்பது தெளிவாகிறதல்லவா என்றும் கேட்பர். ஆனால் இக் கூட்டம் எல்லா நாட்டிலும் உண்டு. இத்தகைய கட்சி தோன்றுவதற்கும் ஒரு காரணம் உண்டு. பழைய கவிதை களில் உள்ள சிறப்புக் குறைந்து, இடைக்காலத்தில் வெறும் கெரள்கைகளை வலியுறுத்தக் கவிதையை ஒரு கருவியாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/344&oldid=751173" இலிருந்து மீள்விக்கப்பட்டது