பக்கம்:இலக்கியக் கலை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் ஒரு வரையறை 19 நலத்திலும் இலக்கியப் பண்புகள் பெருவாழ்வு பெற்று வருவதால், இவற்றையும் இலக்கியங்களாக ஏற்றுப் போற்றும் ஒருவகைப் புதுமைப் போக்கு உருவாகிவருவதை சொற்பொருள் விளக்கம் அறிவிக்கிறது. - இத்தகைய கண்ணோட்டத்தில் இலக்கியத்திற்கு ஒரு வரையறை தரவேண்டிய நெருக்கடி வருங்காலத்தில் உண்டாகும் எனும் எண்ணத்தோடு, இத்தகைய புதிய விளக்கங்களையும் வரவேற்பது நம்முடைய கடமையாகும். இதுவரையில் நாம் கண்ட பல்வேறு வகையான இலக்கியம் பற்றிய விளக்கங்களில் இருந்து, அறியக்கூடிய கருத்துகளைத் தொகுத்து, பின்வருமாறு ஒரு வரையறையை நாம் அமைக்கலாம். இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யு ளாலோ உரைநடையாலோ - உடையது. க ற் பவ ரு ைட ய எண்ணத்தில் எழுச்சியையும் இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக் கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது எனலாம். - - இந்த வரையறையை, ஒரு தற்காலிக மேல்வரிச்சட்டமாகக் கொண்டே, இந்நூல், இலக்கியக் கலையின் பல்வேறு இயல்பு களையும் துறைகளையும் தெளிவுறுத்த முயலுகிறது. S gC DYAH SASACADS AAASASASS k 1. William F. Irmscher, The Nature of Literature p. 2, 2. B. T. wenchesier, Some princples of Litrerary criicrsm, P. 42. - - 3. W. H. Auden [Ed.] G. K. C. Selection from his nonfictional prose, p. 142. . . . 4. W. H. Hudson, An introduction to the study of literature, pp. 10-30 - . - 5. Darcid Daiches, Critical Approaches to literature pp. 4-7 6. Harry Levin: ‘Literature as an Institution'in Sociolagy of Literature pp. 142-46. - . . . . . . . . 7. Diana Laurenson & Asan Swingewood, The Sociology of Literature p. 17. * - . . . . - - 8. Monroe Beardsley, The concept of Literature in Literary theory and Structure (Ed.) Frank Barys and others, pp. 23-24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/35&oldid=751179" இலிருந்து மீள்விக்கப்பட்டது