பக்கம்:இலக்கியக் கலை.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a20 இலக்கியக் கலை ஆபர் கிராம்பி இலக்கியத்திறனாய்வு என்ற நூலில் குறிப் பிடுவதும் இக்கருத்தை வலியுறுத்தும். அப் பொருளை ஏனையோர்போலச் சாதாரணமாகக் கலைஞன் எடுத்துக் கூறமாட்டான் உண்மையை, கற்பனை, அனுபவம் என்ற இரண்டனுடனும் கலந்து, அழகு வடிவான கலைப்பண்ட் மாக்கித் தருகிறான் இங்ங்ணம் செய்தால்தான் அவன் கலை என்றும் நிலைபெற்றிருக்கும். தமிழர்கள் இன்பம் என்ற சொல்லுக்குக் கண்ட பொருள் சற்று ஆழமானதாகும். நிலைபெற்ற இன்பத்தைத் தருவது எதுவாயினும் அது உண்மையும், ஆழமும் உடையதாயிருத்தல் வேண்டும். எனவே கலையுங்கூட நிலைபெற்ற இன்பத்தைத் தரவேண்டுமாயின் ஆழமான உண்மைகள் அதனுள் இருந்தால்தானே. அவ்வாறு தர முடியும்? எனவே முற்றிலும் மேனாட்டுத் திறனாய்வாளரைப் பின்பற்றிச் சென்று கவிதைக்கலையில் நீதி முதலியன இருத்தலாகாது என்று கூறுவது தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை பொருந்தாக் கூற்றேயாம். இது கருதியேபோலும் கவிதைபற்றிக் கூறவந்த தொல்காப் பியனார் இழும் என் மொழியால் விழுமியது நுவலல்’ என்று கூறிப்போனார். விழுமியதே கவிதையில் கூறப் படவேண்டும் என்ற தமிழர் சட்டத்தை மறந்து திறனாய்வு தொடங்கலாகாது. சிலபபதிகாரம் தமிழில் தோன்றிய தலையாய கவிதைகளில் ஒன்று. அது தோன்றிய காரணத் தையும் நாம் அறிவோம் மூன்று பெரு நீதிகளை அடிப் படையாகக்கொண்டு, நூல் தோன்றியதாகப் பதிகம் கூறுகிறது. அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆகச் - சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள் எனக்கூறி. ... • இளங்கோவடிகள் நூலைத் தொடங்கினா! என்று பதிகம் கூறுகிறது. நூல் தோன்றுவதற்கு உரிய காரணம் இவ்வறவுரைகளை நிலைநாட்டுவதே ஆகும். என் றல்லவோ பதிகம் கூறுகிறது? ஆனால் நூலைப் படிக்கத் தொடங்கின்ால், இந்நீதிகளின் நினைவா தோன்றுகிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/350&oldid=751180" இலிருந்து மீள்விக்கப்பட்டது