பக்கம்:இலக்கியக் கலை.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் §§f நடமாடித் திரியலாம்; பேசலாம். ஆனால் அவை பல சமயங்களில் உயிருடன் நம்போல் இருப்பதாக நாம் நினைக்க முடிவதில்லை. காரணம் அப்பாத்திரங்கள் நம் கற்பனையில் சென்று பொருந்துவ தில்லை. சிறந்த புதினத்தில் படைக்கப் பெறும் பாத்திரங்கள் நாம் வாழும் உலகில் நம்மைப்போல் தலைநிமிர்ந்து நடப்பவர்களா யிருத்தல் வேண்டும். அவர்கள் ஒரு கற்பனைக் கதையில் தோன்றும் பாத்திரங்கள் என்பதை மறந்து நாம் அவர்களிடத்தில் அன்பு . காட்டவும், வெறுப்புக் காட்டவும் கூடியவர்களாயிருத்தல் வேண்டும். நம்மைப் போல் இயல்புடையவர்களைக் கதாசிரியன் படைத்தால்தானே நாம் அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியும்?' இயற்கையின் இறந்த இயல்புடைய பாத்திரங் களாயின் அவர்களிடத்து நாம் எவ்வாறு ஊடாட முடியும்? என்றெல்லாம் வினாக்கள் தோன்றுவது இயல்பு. உண்மையைக் கூறப்போனால் எவ்வகையான பாத்திரங்களாயினும் அவர்களிடம் நாம் விருப்பு வெறுப்புக்கள் கொள்ளும்படி படைத்தால் அவன் சிறந்த ஆசிரியனாகக் கருதப்படுவான். வேறு வகையில் கூறுமிடத்து அவன் படைக்கும் பாத்திரங்கள் நம்மைப்போல் எலும்பும், தோலும், இரத்தமுங் கொண்டு இவ்வுலகில் உலாவும் மக்களாக அமைதல் வேண்டும். மனித இயல்பற்ற பூதங்கள், பேய்கள், பிசாசு கள் கொண்டு கதை நீட்டினாலும் அவற்றின் நடையுடைகளைப் படிக்கும் பொழுது நாம் சரி பிசர்சுகள் அப்படித்தானே செய்யும் என்று கூறத்தக்க முறையில் அமைதல் நன்று. . பாத்திரம் படைக்கும் முறை சிற்சில புதினங்களில் இத்தகைய பாத்திரங்களை நரம் சந்திக்கிறோம். பிரதாப முதலியார், ஞானாம்பாள் முதலிய பாத்திரங்கள் இவ்வினத்தைச் சேர்ந்தவர்கள். இப்புதின ஆசிரியர் கள் எவ்வாறு இத்தகைய பர்த்திரங்களைப் படைக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அவர்களுடைய வழி துறைகள் தெரிந்தால் ஏனையோரும் அம்மாதிரி படைக்க ஏதுவாகலாம். ஆனால் துரதிட்டவசமாக இது இயலுவதில்லை. இத்தகைய படைப்புக்களைப் படைக்கும் கலைஞர்கள் ஏனையோர் போல முயன்று இப் பாத்திரங்களைப் படைப்பதில்லை. அக் கலைஞர்கட்கே இப்பாத்திரங்கள் எப்பொழுது தங்கள் மனத்தில் அ லது கற்பனையில் கருக்கொண்டன என்று தெரியாதாம். தீர்ந்த சினை என்ற தலைவனும் ஆழ்ந்த கற்பனை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/372&oldid=751204" இலிருந்து மீள்விக்கப்பட்டது