பக்கம்:இலக்கியக் கலை.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333. -- இலக்கியக் கலை, தலைவியும் சேரும்பொழுது தோன்றும் படைப்புக்களாகும்: இத்தகைய பாத்திரங்கள். இத் தலைவனும் தலைவியும் சேர்வதற். குரிய நிலைக்களமாக ஆசிரியன் அமைகிறான். எனவே இப் படைப்புகள் எங்ங்னந் தோன்றுகின்றன என்று அவனே அறிய முடிவதில்லை. தேக்கரே என்ற மேனாட்டுப் புதின ஆசிரியர், கீழ்க்கண்டவாறு கூறுகிறார். "என்னுடைய கதையில் தோன்றும் பாத்திரங்கள்மேல் நான் ஆட்சி செலுத்துவதில்லை. அதற்கு மறுதலையாக அப்பாத்திரங்களே என்னை ஆளுகின்றன. அவைகள் எங்கு வேண்டுமோ அங்கு என்னைச் செலுத்துகின்றன. அப் பாத்திரங்களின் உரையாடலிற்கூட யான் பங்கு கொள்வதில்லை. பல சந்தர்ப்பங்களில் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்த பின்னரும், ஒர் உரையாடல் நிகழ்ந்த பின்னரும் யானே அது நிகழ்ந்த முறையைக் கண்டு இறும்பூது எய்துவதுண்டு.’ இவ்வாறு; தம்முடைய புதினங் கள் பற்றிக் கூறக் கூடிய ஆசிரியர்கள் நம் நாட்டில் எத்தனை பேர் உண்டு? இயந்திரசாலையில் உற்பத்தியாவதுபோல நூல்களையும் கதைகளையும் காலையில் ஒன்று மாலையில் ஒன்றும் உற்பத்தி செய்யும் நம் புதின ஆசிரியர்கள் தயைகூர்ந்து இதனைக் கவனித்தல் வேண்டும். ஆண்டுக்கொன்று எழுதினாலும் யானைக்குட்டிபோல் உள்ள புதினங்கள் தோன்றட்டும். பன்றிக்குட்டிபோல் பல நமக்குத் தேவை இல்லை. கற்பனைத் திறத்தால் பாத்திரங்களைப் படைக்கும் ஆசிரியர்கள் அமரத்துவம் வாய்ந்த கலைஞர்கள். முயற்சியாலும், வெறும் அறிவின் உதவியாலும் பாத்திரங்களை. உற்பத்தி செய்யும் ஆசிரியர்கள் இயந்திரசாலைகளே அன்றிக் கலைஞர்கள் ஆகார். முன்னையோர் படைத்த பாத்திரங்களை நாம் எளிதில் ஆராய இயலாது. மனித மனத்தைப்போல இப்பாத்திரங்களும் புதிர் நிரம்பியனவாக இருக்கும். ஆனால் இரண்டாவது வகையார் உற்பத்தி செய்யும் பாத்திரங்கள், அறிவினால் அலசிப் பார்த்தால், உண்மை கண்டுவிடக் கூடியனவாக அம்ையும். முதல் வகையில் அறிவு மட்டும் வேலை செய்து பயனில்லை. அறிவு, அநுபவம், உணர்ச்சி என்ற மூன்றுஞ் சேர்ந்து அப்பாத்திரங்கள் படைக்கப்பெற்றிருத்தலின் இம்மூன்றின் உதவி கொண்டே அவற்றை ஆய்முடியும். இருபெரு முறைகள் புதின ஆசிரியன் தன் பாத்திரங்களின் குணாதிசயங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/373&oldid=751205" இலிருந்து மீள்விக்கப்பட்டது