பக்கம்:இலக்கியக் கலை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் ទំ៨៨ கையாளலாம். ஒன்று நேரடி முறை; மற்றொன்று 19 நாடக முறை நேரடிமுறை என்பதில் ஆசிரியன் படர்க்கையில் நின்று தன் பாத்திரங்களைச் செயல் செய்ய விடுத்து அதன் கருத்துக்களையும் அப் பாத்திரங்களின் உணர்ச்சி, தூண்டுதல், எண்ணம் முதலிய வற்றையும்தானே எடுத்துக் கூறுகிறான். அப் பாத்திரங்கள் மேல் முடியும் தானே கூறிவிடுகிறான். இதனை அடுத்து முறையாகிய நாடக முறையில் ஆசிரியன் நேரடியாக ஒன்றுஞ் செய்வதில்லை. அதற்குப் பதிலாக அவனால் படைக்கப்பட்ட பாத்திரங்களே ஒன்றை ஒன்று ஆய்கின்றன. இரு பாத்திரங்கட்கு இடையே நடக்கும் உரையாடல்களே இருவருடைய பண்புகளையும் செயல், மனம், எண்ணம் முதலியவற்வையும் விளக்குவனவாயிருக்கும். இம்முறையில் ஆசிரியன் நேரடியாகக் கூறவேண்டியது அநேகமாக ஒன்றுமில்லை. ஒவ்வொரு புதின ஆசிரியரும் இவ்விரண்டு முறை களில் ஒன்றைப் பெரும்பான்மையாகக் கையாள்வர். பெரும்பான்மையாக என்றுதான் கூறல்வேண்டும். ஏன் எனில் முற்றிலும் பிறிதொரு முறைக்கலப்பு இன்றி ஒர் ஆசிரியர் ஒரு முறையைக் கையாள்வது கடினம். இவ்விரு முறைகளும் மேனாட்டு இலக்கியங்களில் நிரம்பப் பயில்கின்றனவேனும், இவற்றுள் இரண்ட்ாவது முறையையே தற்காலத் தி றனாய்வாளர் அதிகம் போற்றுகின்றனர். மேனாட்டாரும் விரும்பி எழுதிவரும் மறைமுக முறையிலுங்கூட ஒரோவழி நேரடிமுறை புகாமல் இல்லை. இப் புகுதலால் பெற்ற நன்மை யாதெனில் ஆசிரியன் பாத்திரங் களின் நடுவே புகுந்து தனது கருத்தை வெளியிடுதலாம். மறைமுக முறை முற்றிலும் நாடகத்திற்காகவே ஏற்பட்டது. ஆனால் இம்முறையைக் கையாளும் புதினம், தனக்குள்ள தனிச்சிற்ப்பால் முன்னர்க் கூறியதுபோல் நேரடி முறையிலும் கொஞ்சம் தொட்டுக் கொள்வதால் ஒரு சிறப்பை அட்ைகிறது. இச்சிற்ப்பாவது இன் வழி ஆசிரியன் நேரடியாகத் தனது பர்த்திரங்களின் செயல்கள் பற்றித் தன் கருத்தை அறிவிப்பதாகும். பாத்திரங்களின் பண்பாட்டை விளக்க அவர்கள் உரையாடல் பயன்படுகிறது என்று கூறினோமன்றோ? அவற்றோடு நில்லாமல் ஆசிரியனும் அவர்கள் மனக்கருத்தை விளக்குகிறான். . . . . ఒబవిuు. : : எத்துணைச் சிறந்த கலைஞனாயினும் பாத்திரப் படைப் பின்பெர்ழுது அவனுக்கு வேண்டிய இன்றியமையாத சாதனங் களுள் ஒன்று நிறைந்த உலகாதுபவம். எந்தச் சூழ்நில்ை இ. —23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/374&oldid=751206" இலிருந்து மீள்விக்கப்பட்டது