பக்கம்:இலக்கியக் கலை.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் 355 சிந்தனையைத் தூண்டும் எதனையும் விரும்புவதில்லை, திடீர் நிகழ்ச்சிகள் நிறைந்துள்ள உலகில் வாழும் மக்கள் மாறிமாறி நடைபெறும் நிகழ்ச்சிகள் நிறைந்த புதினத்தையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் உலக இலக்கியங்களை, சிறப்பாக ஆங்கில இலக்கியத்தைப் பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கக் காணலாம் நாள் ஒன்றுக்குப் பத்துப் புதினம் வரை வெளியிடப்படும் அம்மொழியிற்கூட நிலைத்து நிற்பவை ஒருசிலவே, பழமை பெற்றனவாய டிக்கன்ஸ் தேக்கரெ ஸ்காட் போன்றவர் களுடைய புதினங்கள் தம் சிறப்பில் ஒரு சிறிதுங் குறையாமல் நிலவுகின்றன. அவை அனைத்தையும் ஆராயும்பொழுது. அவை முழுதும் பாத்திரங்களால் சிறப்புப் பெற்ற புதினங்கள் என்பது விளங்கும். இத்தகைய சிறந்த புதினங்களிலிருந்து சில உண்மைகள் அறியப்படவேண்டும் - - மாறாப் பண்பு சிறந்த புதினங்களில் பாத்திரங்களும் சூழ்ச்சியும் தம்முள் நன்கு தொடர்பு கொண்டிருக்கும் பாத்திரமும், சூழ்ச்சியும் ஒன்றற்கொன்று இன்றியமையாதவையாக அமைதல் வேண்டும். அப்பாத்திரங்களைப் பிரித்துவிட்டால் அச்சூழ்ச்சி பயனற்றுப் போய்விடும் என்ற நிலையில் அமைவதே சிறந்த புதினம். மட்ட ரகமான சூழ்ச்சி நிறைந்த புதினங்களில் தோன்றும் பாத்திரங்கள், உயிருள்ள பாத்திரங்களாக இராமல் பொம்மைகளாக உலாவுதல் காண்ட்ற்குரியது. ஸ்காட் என்ற சிறந்த புதின எழுத்தாளர் "ஒவ்வோர் ஆசிரியனும் புதிய நிகழ்ச்சியை நுழைக்கும்பொழுது அது நுழைக்கப்பட வேண்டிய காரணத்தைக் கற்போர் மனங்கொள்ளுமாறு காட்ட்ல் வேண்டும் என்று கூறுவது அறிதற் குரிய்து. ஒவ்வொரு பாத்திரமும் ஒரு செயலில் மேற்கொள்ளும் பொழுது, சரி! இப்பண்பிற்கு இச்செயல் இந்நேரத்தில் ஏற்றதுதான் என்ற எண்ணம் தோன்றவேண்டும். புதிய ஒரு நிகழ்ச்சியை தோற்றுவித்தற்காக ஒரு பாத்திரத்தை அதன் பண்பிற்கு மாறாக ஒரு செயலைச் செய்யாறு செய்வது புதின ஆசிரியனின் வன்மைக் குறைவையே வெளியிடும். எனவே ஒரு பாத்திரம் என்ன பண்புடன் முதலிலிருந்து காட்டப்பெறுகிறதோ அதற்கு விரோதமான ஒரு செயலைச் செய்யுமாறு செய்வது தகாது. இங்ங்ணம் அமைக்கப்பெறுகிற புதினந்தான் சூழ்ச்சியும் பாத்திரமும் நன்கு அமைக்கப்பெற்ற புதினமாகும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/376&oldid=751208" இலிருந்து மீள்விக்கப்பட்டது