பக்கம்:இலக்கியக் கலை.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 இலக்கியக் கலை 60سا اللاgها6 مسع இதனையடுத்துப் புதினம் சிறப்படைவது உரையாடலா லாகும். புதினத்திலேயே மிக்க மகிழ்ச்சியை அளிக்கும் பகுதி உரையாடல் என்பதை ஆசிரியர்கள் பலர் மறந்து விடுகின்றனர். புதின ஆசிரியன் நாடகத் தன்மையை எட்டிப் பிடிப்பது இப் பகுதியில்தான். எனவே இதன் சிறப்பைப் பற்றி அதிகம் கூறத் தேவை இல்லை. இதன் சிறப்பு அதிகரிக்க அதிகரிக்க இதனைப் பயன்படுத்துவதில் உள்ள துன்பமும் அதிகமாகிறது. உரையாடல் கேவலம்பொருளற்ற வார்த்தைக் கோவையாகவும், அடுக்குமொழி அலங்காரமாகவும் இருத்தலில் பயன் இல்லை. அதுவும் புதினத்தில் அவ்வாறு இருத்தல் பெருந் தவறு. பயனிலசொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் புதடி எனல் (குறள் . 186.) என்ற உண்மையை ம ற க் க வேண்டாம். உரையாடல் புதினத்தில் தோன்றும் பல பாத்திரங்களினுடைய மனம், பண்பு குறிக்கோள், உணர்ச்சிகள் முதலியவற்றை நமக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி, சிறந்த ஆசிரியன் கையில் இவ்வுரையாடல் சிறந்த பயனை அளிக்கும். கேவலம் சொல் அலங்காரப் புல்லியர்கள் இதன் அருமைப்பாட்டை அறிவதும் அறிவிப்பதும் கடினம். ஆங்கிலமொழிப் புதினங்களில் அதிகம் பயிலப் பெறும் கை சுவையாகும் "நகைச்சுவை என்பது. னம் கற்பவர்கட்கப் ஒரு கு 3il. Վ Д) கு பாரமாக இராமல் இன்பந்தர இச்சுவை பயன்படுவது மட்டுமன்றி மற்றொரு பெரிய செயலையும் செய்ய உதவுகிறது. சமுதாயத்தில் காணப்பெறும், குறைபாடுகளை எடுத்துக்காட்டி அதைத் திருத்த வேண்டிய கடப்பாடு புதின ஆசிரியனுக்கும் உண்டு. இத்தகைய செயலை நேரடியாக அவன் செய்யப் புகுந்தால் அதனை யாரும் விரும்பி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தீமையை ஒட்டவும், சமுதாயக் குறைகளை எடுத்துக் காட்டவும் நகைச்சுவை பொருந்திய உரையாடலை ஆசிரியன் கையாள்கிறான். ஆனால் நகைச்சுவை என்பது இருபுறமும் கூர்மையுடைய கருவியாகும். ஆசிரியன் தக்க முறையில் இதனைப் பயன்படுத்தவில்லையாயின் இதனால் அவனுக்குக் கெட்ட பெயர்தான் மிஞ்சும். தாழ்ந்த நகைச்சுவை விளையுமாறு உரையாடல் செய்வதும், பிறர் மனம் நோகுமாறு நகைச்சுவையைக் கையாள்வதும் சிறந்த கலைஞன் செய்யாதவை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/377&oldid=751209" இலிருந்து மீள்விக்கப்பட்டது