பக்கம்:இலக்கியக் கலை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இலக்கியக்கல்ை வேண்டும். தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு என்ற பழமொழி நிறைந்த உட்கொளை உடையது. இன்னும் கூறப்போனால் ஒரே மொழி பேசும் பல்வேறு பகுதியினருள்ளும் பழக்க வழக்கங்கள் மாறுபடுதலைக் காணலாம். அவ்வாறு இருக்க, இப் பழக்க வழக்கங்கள் தெரியாதவர் புதினத்தில் சூழ்நிலை அமைப்பது பெருந் தவறாக முடியும். யாழ்ப்பாணத்தார் களும். திருநெல்வேலியார்களும், சென்னையார்களும் தமிழே பேசினும் இவர்கள் எண்ணங்கள், பண்பாடுகள் முதலியன பெரிதும் வேறுபட்டு இருக்கக் காணலாம். எனவே, சூழ்நிலை அமைக்கும் புதின ஆசிரியன் இதில்!அதிகக் கவனஞ் செலுத்தல் வேண்டும். கிராமங்களில்,செயல் நடைபெறுவதாகக் கூறவந்த ஒரு புதின ஆசிரியன் பழைய தல புராண முறையில் மாட மாளிகைகளையும், கூடகோபுரங்களையும் வருணிக்கப் புகுதல் எவ்வளவு தவறு! இருவகை அமைப்பு சூழ்நிலை அமைப்பை நன்கு அறிந்த புதின ஆசிரியன் இருவகை அமைப்புக்களை மேற்கொள்ளலாம். ஒன்று, "சமுதாய அடிப்படையில் நிகழ்வது. மற்றொன்று 'இயற்கை யமைப்பு அடிப்படையில் நிகழ்வது. இவ்வகைப் பிரிவினைகள் திறனாராய்ச்சியிலும், மேலை நாட்டுப் புதினங்களிலும் காணப் பெறுகின்றனவே தவிரத் தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் தோன்றிய புதினங்களில் இப் பாகுபாட்டைக் காண்பது கடினம், தமிழர் சமுதாயத்தையும், பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை என்று கூறத்தக்க புதினங்கள் இருக் கின்றனவா என்பது ஐயத்திற்கிடமானதே. இதுதான் இல்லை. என்றாலும் அவ்வினத்தாரின் ஓரிரு பண்பாட்டையேனும் எடுத்து விளக்கக் கூடிய புதினங்கள் உண்டாஎன்றால் அவையும் விரல்விட்டு எண்ணத் தகுந்தனவாகவே உள்ளன. மேலே கூறிய இரண்டு குறிக்கோள்களையும் கொண்டு ஒரு புதினம் செய்தல் என்பது மிகக் கடினமானதே. ஆனால், இவ்வகையில் யாரேனும் முயன்று அதில் தோற்றுப்போனாலும் அது வரவேற்றற்குரியது . " . , 8. கான முயலெய்த ക്രിങ് ᎿLi [ 6ö ᏮᏡᎢ - - பிழைத்தவேல்.ஏந்தல் இனிது (குறள் 272) என்ற பேருண்மையைத் தமிழ்ப் புதின எழுத்தாளர்கள் நினைவில் கொள்வது நலம் ஒரே புதினத்தில் இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/379&oldid=751211" இலிருந்து மீள்விக்கப்பட்டது