பக்கம்:இலக்கியக் கலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கியக்கவை 'கவிஞர்கள், கவிஞர்களாகவே பிறக்கிற்ார்கள், பிறந்தபிறகு அவர்கள் கவிஞர்களாக உருவாக்கப்படுவதில்லை' எனும் முது மொழி வழக்கிற்கு வந்துள்ளதை நினைவுகூர்தல் வேண்டும். தனிமனிதனுடைய அறிவுத்திறனைச் சாராது, அதனிலும் மேம்பட்ட ஒர் ஆற்றலால் உந்தப்பட்டு, ஆக்கப்படுகின்ற இலக்கியங்களே சிறந்து விளங்குகின்றன் எனும் கருத்தால், படைப் பாளன் ஒரு வகையான அகத்துாண்டுதலால்தான் இத்தகைய தலை சிறந்த படைப்புகளைப் படைக்க முடிகிறது எனும் நம்பிக்கை வெளிப்படுகிறது. . . - இந்த அகத்துாண்டுதலுக்கு மூலமாக - அடிப்படையாக இருப்பது எது? எனும் வினாவினை எழுப்புகின்றபொழுது தெய்விகத்தன்மை அல்லது திருவருள் எனும் விடையே பலரால் கூறப்படுகிறது. - - - - பண்டை உலகக் கவிஞர்கள் பாபிலோனிய, கிரேக்க, ரோமானிய, இந்திய, சீன நாடுகளின் கவிஞர்கள் யாவருமே, தங்கள் நூல்களைப் படைக்கின்றபொழுது காப்புச் செய்யுளாகக் கடவுள் வாழ்த்தினை அமைத்துள்ளனர். தாங்கள் தொடங்கும் பணி இனிது நிறைவுற வேண்டும் எனும் எண்ணத்தோடு, தங்கள் விழிபடு தெய்வங்களை அவர்கள் வேண்டி, வழிபாடு செய்துள்ளனர். இதனால், அவர்கள் எல்லாரும், தெய்விகப் பித்துக் கொண்ட வர்கள் எனக் கருத இயலாது. ஒரு செயலைத் தொடங்குகின்ற பொழுது அதில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் தான். அச்செயலைச் செய்கின்றவர்கள், அதில் r வெற்றிபெற இயலும். இவ்வாறு முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுகின்ற பொழுது, மனித இயல்புக்கு மாறான ஒருவகைப் பேரார்வமும் பேரெழுச்சியும் வாய்ந்தவர்களாக, உலகைமறந்து, தங்கள் பணியில் ஈடுபடுவர். தன்னை மறந்த வயந்தனில் இருந்தேன் என்று தேசிய கவிஞர் பாரதியார் இதைத்தான் குறிப்பிட்டுள்ளார். இதைத்த்ான் 'தெய்வீக அகத்தெழுச்சி என்னும் பெயரால் மனித குலத்தின் மூதாதையர் போற்றியுள்ளனர். இந்த்க்கருத்தினை இக்காலத்தில், அப்படியே ஏற்றுக்கொள்ள அறிஞர் தயங்கு இன்றனர். ஆனால், உளவியல் அறிஞர் தன்னை மற்ந்த பட்ைப்பு |ffsoapá šT&TG) 56 (unconscious Creative impulse); gram # குறிப் பிடுவதை திறனாய்வாளர்கள் உடன்படுகின்றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/38&oldid=751212" இலிருந்து மீள்விக்கப்பட்டது