பக்கம்:இலக்கியக் கலை.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் ខ្ញុំទីន அனைத்தும் இடம் பெறாவிடினும் ஒரே ஆசிரியர் இயற்றிய பு புதினங்களில் இவை இருப்பினும் நலமே, - - - - சமுதாய அடிப்படையில் உள்ள தொல்லை இம் முறையில் உள்ள கடினம் கருதிப் போலும் மேலைநாட்டில் கூட இத்தகையோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்காலம் சிறப்புப் பெறுவது ஒவ்வொரு பகுதியை எடுத்துக்கொண்டு விரிக்கும் புதினமே யாகும். போர் வீரனுடைய வாழ்க்கை, மாலுமி வாழ்க்கை, மிகப்பெருஞ் செல்வன், நடுத்தரமனிதன், ஏழை முதலானவர்கள் வாழ்க்கைளை எடுத்துக்கொண்டு புதினம் செய்யும் முறை மேலைநாட்டு இன்றைய இலக்கியங்களில் பல்கியுள்ளன. இம்முறை ஓரளவு தமிழ்ப்புதினங்களிலும் இடம் பெறினும் இன்னும் நன்கு சிறக்கவில்லை. இந்திய நாட்டில் சற்று முன்னாள்வரை தலைவிரித்தாடின சிற்றரசர்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எத்தனையோ புதினங்கள் இயற்றி யிருக்கலாம். ஆனால் இன்றைத் தமிழ்ப் புதினங்கள் பெரும்பாலும் பணக்காரர்களைத் திட்டுவதும் தொழிலாளியைப் போற்றுவதும் தம் கடமையாகக் கொண்டு உள்ளன. செல்வர்களின் வாழ்க்கை முறையைப் படம் பிடித்துக்காட்டக்கூடிய புதினங்கள், அவர்கள் மனநிலையை வெளியிடும் புதினங்கள் என்று கூறத்தக்க நிலையில் ஒன்றும் இல்லை. காரணம் என்ன? புதின ஆசிரியர்கள் கூர்ந்து நோக்கும் இயல்புடையவராய் இல்லாமையே ஆகும். தான் எந்தப் பகுதியை எழுதினும் ஆசிரியன் அதனைக் கூர்ந்து நோக்கி அதனிடம் காணாதனவெல்லாம் காண்டல் வேண்டும். இவ்வாறு கூறுவதால் இல்லாத பொய்களையெல்லாம் எழுத வேண்டும் என்பது கருத்தில்லை. ஏனையோர் கண்டும், உட்பொருள் அறியாமல் இருப்பவற்றின் பொருளை இவ்வாசிரியன் அறிந்து உண்மை கூறவேண்டும் என்பதே கருத்தாகும். தற்கால நிலை ஒரு காலத்தில் அரசர்களைப்பற்றிக் கூறுவதே கதை என்றிருந்ததுபோகத் தற்காலத்தில் இனப் போராட்டம், காதல் என்பவை இருப்பதே கதை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சாதாரண மனிதன் ஒருவனுடைய அன்றாட வாழ்க்கையைக்கூட ஒரு புதினத்திற்கு அடிப்படையாக்கலாம் என்பதை நம்மவர் னைப்பதில்லை. எளியவர் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/380&oldid=751213" இலிருந்து மீள்விக்கப்பட்டது