பக்கம்:இலக்கியக் கலை.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 இலக்கியக் கலை: போராட்ட்ங்களும்கூடச் சிறந்த கலைஞன் கையில் சிறந்த சூழ்நிலையில் கதைகள் அமைப்பதும் சிறந்த ஒன்றுதான். ஒரு சூழ்நிலையில் தோன்றி வளர்ந்த ஒருவன் முற்றிலும் மாறான மற்றோர் சூழ்நிலையில் வாழும்படிச் செய்து அதில்தோன்றும் அழகு களையும் புதினங்கள் எடுத்துக் காட்டலாம். இம்முறைகளில் எவை கையாளப்படினும், ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதியைப் பற்றி மட்டும் கூறும் புதினம் கீழே தரப்பட்டுள்ள ஒரு சட்டத்தை மட்டும் மறவாமல் இருத்தல் வேண்டும். பாத்திரத்தின் குணாதிசயங்கள் சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கும் என்ற சட்டமே அதுவாகும். இப்பகுதி சிறப்படையும் புதினமே சிறந்தது என்று கூறப்படும். தஞ்சாவூரிலுள்ள ஒரு பெரிய நிலக்கிழாரும் சென்னையிலுள்ள ஆலை முதலாளியும் பணக்காரர் என்ற பொதுப்பெயரினுள் அடங்குவரேனும் இருவருக்கும் பண்புகள் வேறுபடும். இதனை விரிப்பதே சூழ்நிலை எனப்படும். புதின ஆசிரியன் இதனை நன்கு அறிந்தே தனது கதையை நடத்திச்செல்ல வேண்டும். * . . . . . சரிதப் புதினம் சரித்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எழும் ஒரு வகைப் புதினங்களும் வேற்றுமொழி இலக்கியங்களில் உண்டு, ஆனால், நம்முடைய தாய்மொழியில் இதுவும் போதிய அளவு இல்லை. இவ்வகைப் புதினங்களில் ஒரளவு ஆசிரியனுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப் பெறுகிறது. நடைபெற்ற சம்பவங்கள் ஆசிரியனுடைய விருப்பம்போல் நடைபெறுவதில்லை. எனவே அவற்றை வைத்துக்கொண்டுதான் அவன் வேண்டிய அளவு பயன் படுத்திக் கொள்ளல் வேண்டும். சரித்திரத்திற்கு மாறாகப் போகாமலும், கலைச்சுவை குறையர்மலும் இருக்கவேண்டிய இக்கட்டான நிலை இவ்வகைப் புதினம் இயற்றும் ஆசிரியனுக்கு உண்டு. புதினமும் வாழ்க்கையும் இதனையும் அடுத்துப் புதினத்தில் காணவேண்டிய இயல்பு ஒன்று உண்டு. புதின ஆசிரியன் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டுள்ள எண்ணமே அதுவாகும். எத்தகைய மனிதனும் உலக வாழ்க்கைபற்றி ஒரு தத்துவம் கருதியிருப்பான். நாடகத்தைப் போலப் புதினமும் நேரடியாக வாழ்க்கையைப் படம் பிடிப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/381&oldid=751214" இலிருந்து மீள்விக்கப்பட்டது