பக்கம்:இலக்கியக் கலை.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 இலக்கியக் கலை வெளியில் நீட்டிக் கொண்டிருத்தலும் உண்டு. சிறந்த ஆசிரியர் களுடைய நூல்களில் இத்தத்துவம் உள்ளே மறைந்து இருத்தலும் உண்டு, தத்துவம் வெளியிடுமுறை இத்தகைய தத்துவத்தை ஆசிரியன் எவ்வாறு நமக்குத் தருகிறான்? அவன் என்ன தத்துவத்தைத் தரவேண்டும் என்று நினைக்கிறானோ அத ற்கேற்ற பாத்திரங்களையும், சூழ்நிலையை யும் செயல்களையும் ஏற்படுத்திக்கொண்டு கதையை நடத்திச் செல்லுமுகமாகவே இதனைப் பெற வைத்தல் ஒரு முறையாகும். நாடக ஆசிரியன் தன் பர்த்திரங்களின் செயல்கள், பேச்சுகள் என்ற இரண்டின் துணை கொண்டே இதனைச் செய்யமுடியும். ஆனால், புதின ஆசிரியனுக்கு மற்றொரு சிறந்த சாதனம் என்னவெனில் நேரடியாக அவனுடைய கருத்தைக் கூற வசதி உண்டு என்பதே யாகும். புதினத்தில் கூறப்பெறும் தத்துவத்தை அளவிட இரண்டு அளவுகள் உண்டு. முதலாவது அதனுடைய உண்மைத்தன்மை; இரண்டாவது அதனுடைய நல்லியல்பு. வாழ்க்கைத் தத்துவத்தில் உண்மை என்பது யாது? நாம் கர்ணக்கூடியவற்றையே உண்மை என்று கூறிப் பழகிவிட்டோம். எனவே, நம் அநுபவத்திற்கு அப்பாற்பட்டவற்றைப் புதினங்கூறி அதிலிருந்து ஒரு வாழ்க்கைத் தத்துவம் கற்பித்து இருப்பின் அதனைப் பொய் என்று தள்ளிவிடு கிறோம். இது தவறு. நம் அநுபவத்தின் அப்பாற்பட்டது உண்மை யற்றது அன்று. அது மெய்யா என்று வேண்டுமானால் கேட்கலாமே தவிர உண்மையா என்று கேட்பது தவறு. எனவே, புதினம் உண்மை கூறவேண்டுமே தவிர, மெய்ம்மை கூறவேண்டிய இன்றியமையாமை இல்லை. மெய்ம்மை கூறும் நூல்கள் கலைகள் அல்ல; உண்மை கூறும் கலை நூல்களில் மெய்ம்மை இருக்க வேண்டும் என்ற கடப்பாடு இல்லை. நல்லியல்பு இருக்கும் அல்லது போதிக்கும் தன்மை உள்ளதே சிறப்புப் புதினம். - வாழ்க்கையில் இருப்பதை அப்படியே கூறவேண்டும். அதுவே மெய்ம்மை என்று கூறும் சிலர் நல்லியல்பை மறந்து புதினம் இயற்றுகின்றனர். ஆனால், த,மொழிகளில் நிலைபெற்ற புதினங்களை ஆராய்ந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/383&oldid=751216" இலிருந்து மீள்விக்கப்பட்டது