பக்கம்:இலக்கியக் கலை.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்டக இலக்கியம் - 36% "பக்கங்களில் வைக்கும் எழினிகளையும், ஒருமுக எழனி எனக் கூறுகிறது. இடைக்காலத்துத் தோன்றிய பெருங்கதை என்ற நூல், அரங்கத்தில் தொங்கவிடப்படும் ஏனைய திரைச்சீலைகளைப்பற்றிக் கூறுகிறது இக்கால நாடகங்களில் காடு என்றால் நாலு மரங்கள் மட்டும் எழுதிய திரைகளைத்தான் காணமுடியும். ஆனால் அக்காலத் திரைச்சீலைகள். - கொடியும் மலரும் கொள்வழி எழுதிப் பிடியுங் களிறும் பிறவும் இன்னவை வடிமாண் சோலையொடு வகைபெற வரைந்து' (பெ. உஞ்சைக் காண்டம் 68-65) காணப்பட்டன என்று பெருங்கதையில் உஞ்சைக் காண்டம் கூறிச்செல்கிறது. மின்சாரத்தின் உதவிபெற்ற இந்நாட்களில் கூட அரங்கில் நிற்கும் நடிகர்களின் நிழல் பேய்கள்போல் பின் திரையில் விழும்படி விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இன்றேல் உட்கார்ந்து நாடகம் பார்ப்பவர்மேல் படும்படி அமைகின்றன. பழந்தமிழன் நாடகசாலையில் தூண் நிழல் கூட யாண்டும் விழாதபடி விளக்கு கள் அமைக்கப்பட்டனவாம். 'தூண் கிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து' என்ற அடிக்கு, அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் இவை முதலியன காண்டற்குரியன. இத்தகைய அரங்குகள் நாடகம், நாட்டியம் என்ற இரண்டிற்கும் பயன்பட்டன. கூத்து என்ற பொதுப் பொருள் இவை இரண்டும அடங்கின. கூத்து என்பது சாந்திக் கூத்து, வினோதக் கூத்து என இருவகைப்பட்டது. வினோதக் கூத்து சாதாரண மக்கள் பொழுதுபோக்கிற்காக ஆடப்பெற்றது. சாந்திக் கூத்து நல்ல நடிகர்களால் ஆடப்பெற்றது. சாந்திக் கூத்தும் நால்வகையினது. சொக்கம், மெய்க் கூத்து, அபிநயக் கூத்து, நாடகம் என்பனவாம் அவை, இவற்றுள் முதலது வெறும் சர்ட்டியமேயாகும். மெய்க்கூத்து என்பது மெய்ப்பாட்டை அல்லது னநிலையை வெளியிட்டாடுவது. தற்காலத்தார் அபிநயம் என்பது இதையே போலும். அபிநயக் கூத்து இன்பியல் சம்பந்தமானது. நாடகம் என்பது கதையை நடித்துக்காட்டுவது. பாட்டும் உரையும், நடிப்பும் கலந்த ஒன்றே நாடகம் எனப்பட்டது. ஆரியக் கூத்து என்ற ஒரு தனிப்பிரிவு இருந்தமையின் வடமொழி நாடகங்களையும் தமிழில் ஆக்கி நடித்து இன்புற்றனர். இவர்கள் என்று நினைக்கலாம், - . . - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/388&oldid=751221" இலிருந்து மீள்விக்கப்பட்டது