பக்கம்:இலக்கியக் கலை.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 இலக்கியக் கலை நாடக நூல்களின் பிரிவு இந்நிலையில் நாடகம் நடைபெற வேண்டுமாயின் நல்ல நாடக நூல்கள் இருந்திருக்கவேண்டும். மேலைநாட்டு அறிஞர் சிலர் நினைப்பதுபோல. இத் தமிழ்நாட்டார் நாடகத்தை இருபிரிவாகக் காணவில்லை. அவர்கள் படிப்பதற்கு உரிய நாடகங்கள் என்றும் நடிப்பதற்கு உரிய நாடகங்கள் என்றும் இருவகையாக நாடகங்களைப் பிரித்துள்ளனர். இக்காரணத்தால் இவ்விருவகை நாடகங்களும் அந் நாட்டில் பல்கின. ஆனால், இந்நாட்டில் எழுதப்பெற்ற நாடகங்கள் அனைத்துமே நடிப்பதற் காகவே எழுதப் பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாறு கூற ஒரு காரணமுண்டு. நடிக்கும் பழக்கம் நாட்டில் வெகுவாகக் குறைய ஆரம்பித்தவுடனேயே நாடக நூல்களும் அழிந்தன. இடைக் காலத்திலும் பிற்காலத்திலும் குறவஞ்சி நாடகங்கள், நொண்டி நாடகங்கள் போன்ற பல நாடகங்கள் தோன்றியனவாக அறிய முடிகிறது. மிகப் பிற்காலத்தில் தோன்றிய இக் குறவஞ்சி, நொண்டி நாடகங்கள் தவிர, நாடகம் என்று கூறத்தக்கது ஒன்றும் இன்றில்லை, இந் நாடகங்கள் சீர் அழியக்காரணம் என்ன என்பது ஆாாய்வதற்குரிய ஒன்று. இடைக்காலத்தில் தமிழ் நாட்டில் புகுந்த வேற்றுச் சமயங்கள் ஒருவேளை இவ்வழிவுக்குக் காரணம் போலும். அச் சமயத்தார்கள் பொறி புலன்களை அடக்கலும், உலக இன்பங்களை அநுபவியாது துறத்தலுமே வீட்டிற்கு உகந்த நெறி என நினைத்தனர், அக் கொள்கையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு காலத்தில் அமிழ்ந்தியதுண்டு அச்சார்பு பற்றியும் நாடகத்திற்கு வழக்கின்றிப் போயிருத்தல் கூடும். வேற்று நாகரிக விருப்பம் தமிழ் இனத்தில் அதிகரித்ததும் ஒரு கர்ரணமாக இருக்கலாம். மேலும், நாடக முதலியன அரசன் போற்றவேண்டிய கலைகள். ஆங்கில நாடகத்தின் சரித்திரத்தை நோக்கினால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு சமயம் அரசர்கள் போற்றாத காலங்களில் இங்கிலாந்தில் நாடக அரங்குகள் முற்றும் மூடப் பட்டன என அறிகிறோம். தமிழ்நாட்டிலும் அவ்விதமே நடைபெற்றிருத்தல் தேண்டும். தமிழ் மன்னர்கள் நாட்டை ஆட்சி செய்த வரையில் இயல், இசை, நாடகம் என வழங்கிய தமிழ், களப்பிரர் .ாலத்திற்குப் பிறகு இயற்றமிழுடன் நின்றுவிட்டது அறிதற்பாலது. - மேற்கூறிய காரணங்களால், பழங்காலத்திலோ, இடைக் காலத்திலோ தோன்றிய நாடகம் ஒன்றுகூட இன்று இல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/389&oldid=751222" இலிருந்து மீள்விக்கப்பட்டது