பக்கம்:இலக்கியக் கலை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் 28, இவ்வாறு அகத்துTண்டுதலுக்கு அடிமைப்பட்டுப் படைப்புத். தொழிலில் ஈடுபடுவது, பேராபத்தை உண்டாக்கும் எனக் கருதுவாரும் உளர். "அகத்துாண்டுதல்போல், தோன்றும் எதனையும் கவிஞன் நம்பக்கூடாது. ஏனெனில் மனநலமும் உடல் நவமும் பாதிக்கப்படுகின்றன." என அறிஞர்கள் கூறுகின்றனர். எனினும், அகத்துாண்டுதலைப்பற்றிய நம்பிக்கை யாதாகிலும் ஒருவகையில் அல்லது வடிவில் கலைஞர்கள் இடையே இருந்து, வருவதை, நாம் எளிதில் புறக்கணிக்க இயலவில்லை. ஃபிராய்டின் கருத்து. உள்ளப்பகுப்பாய் ((Psycho analysis) வின் கோட்பாட்டை உருவாக்கிய ஃபிராய்ட் (Freid) எனும் உளவியல் அறிஞர் “அகத்துரண்டுதல் மனிதனுடைய அடிமனத்தில் உறங்கிக் கொண்டி ருக்கும் மனித உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிப் படுத்தும் ஒரு கருவியாக அமைகிறது” என்பர். உணர்வுகடந்த சிந்தனையில் இருந்தோ, இறையருளாலோ வெளிப்படும் அகத் தாண்டுதலுக்கு ஒரு கவிஞனுடைய அடிமனமே பிறப்பிடமாக அமைகிறது என்பது இதனால் புலனாகிறது. - • ' அனுபவம் பரிமாற்றத் துடிப்பு ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பெறும் அனுபவங்கள் - இடத்திற்கும் காலத்திற்கும், வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப வெவ்வேறாக அமைகின்றன; மாறுபடுகின்றன. ஒருவனுடைய வாழ்க்கை அனுபவத்தை முழுமையாக மற்றொருவர் பெற இயலாது. ஒருவர் பெற்ற வாழ்க்கைப் பேறுகளாகிய அனுபவத்தை, மற்றொருவர் பெற மு ய லு வ தும் உண்டு. ஆனால், எல்லாரும் 'எல்லா அனுபவங்களையும் தம்முடைய குறுகிய வாழ்நாளில் ஒருங்கே பெற இயலாது. இத்தகைய நிலையில், படைப்பு ஆற்றல் திறன் உடைய வர்கள், தாம் வாழ்வில் பெற்ற இன்பதுன்பங்களாகிய அனு பவத்தைப் பகிர்ந்துகொள்ளத் துடிக்கின்றனர். இந்நிலையில் மொழியின்மூலம் தங்கள் அனுபவங்களை அவர்கள் எடுத் துரைக்கின்றனர், அல்லது வெளிப்படுத்துகின்றனர். இதனால், "அனுபவத்தின் வெளிப்பாடே இலக்கியம்" எனும் கருத்தும் தோன்றலாயிற்று. தம்முடைய அனுபவத்தைப் பகிர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/39&oldid=751223" இலிருந்து மீள்விக்கப்பட்டது