பக்கம்:இலக்கியக் கலை.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 இலக்கியக் கலை வரிடத்திலும் சுல்தான்பேட்டை சப்மாஜிஸ்ட் ரேட்'டின் இயல்பு ஒரளவு இருக்கிறது. நம்மிடம் இருந்து மறைந்து கிடக்கும் இப் பண்பாட்டை நாடக ஆசிரியன் விவரிப்பதால் அந்நாடகம் என்றும் நிலைபெற்று நிற்கிறது. - - - - - உரையாடல் இப் பாத்திரங்களின் பண்பாட்டை ஆசிரியன் எவ்வாறு விளக்குகிறான்? அவர்களுடைய நடிப்பு, பேச்சு இவை இரண்டிற்கும் காரணமான அவனுடைய சூழ்ச்சி என்பவற்றால்தான் விவாது கிறான். ஆனால், முற்கூறிய கால, இடநெருக்கடி இங்கும் தலைகாட்டுகிறது. பாத்திரங்கள் நாடகங்களில் நேரங்கடந்து பேசிக்கொண்டிருக்கவியலாது. அதிலும் குறைந்த நேரத்தில் நிறையப் பாத்திரங்கள் பேசித் தீரல்வேண்டும். எனவே, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வீதாசாரம் எடுத்தால் பேசும் நேரமும், அளவும். இகவும் குறைவாகவே இருக்கும். இந்த எல்லைக்குள் அவர் களுடைய பண்பைப் பார்ப்பவர் அறியுமாறு செய்வது |ETقبا ஆசிரியன் கடமையாகும். சுருங்கக் கூறுமிடத்து வள்ளுவப் பெருந்தகையின், . . lജകൊട് காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.' -குறள் : 649. என்ற குறளை நாடகாசிரியன் என்றும் நினைவில் இருத்த வ்ேண்டும் அளவு சுருங்கிய காரணத்தால் தாம் செய்ய வேண்டிய செயலைச் செய்யாமலும் இருந்துவிடக்கூடாது. அவ்வுரையாடல். இவ்வுண்மை தெரியாத நம் நாட்டு நடிகர் பலர், தாம் பலமுறை அரங்கத்தில் தோன்றவேண்டுமென்றும், நிறைந்த அளவு பேச்சுக்கள் பேசவேண்டுமென்றும் கூறுதல் கேட்கப்படுகிறது. ஷேக்ஸ்பியர் எழுதிய மாக்பெத் என்ற சிறந்த நாடகத்தில் முக்கிய பாத்திரங் களாகிய, மாக்பெத்தும், அவருடைய மனைவியும் முறைய்ே. 87.3 வார்த்தைகளும், 864 வார்த்தைகளுந்தான் முதற்களத்தில் ப்ேக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். 23-பக்கங்கள் அச்சில் உள்ள. முதற்களத்தில் இவ்வளவுதான் இவர்களுடைய பேச்சுக்கள். ஆனாலும், இவ்வொரு களத்தைக்கொண்டு அவர்களை அளவிட்டு விடலாம். . . - அளவுக்குறைவு என்ற காரணத்தால் ஏதாவது உரையாடலைப் ஈட்டு நிரப்பிவிட்டு அதிலிருந்து அவர்கள் குணாதிசயங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/393&oldid=751227" இலிருந்து மீள்விக்கப்பட்டது