பக்கம்:இலக்கியக் கலை.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 877 வழங்கும். 'நாடகங்களையும், திரைப்பட நாடகங்கள்ையும் சற்று மனக்கண்முன் கொண்டு வந்தால் என்ன தோன்றுகிறது? நம் ஆசிரியர்களில் ஆயிரத்திற்கு ஒருவர் கூடத் தொடக்க நிகழ்ச்சி யில் இவ்வளவு கடினம் இருப்பதை எண்ணிப் பார்த்ததாகவும் தெரியவில்லை. பதினாயிரத்தில் ஒருவர்கூட இக் குறைபாட்டைப் போக்க முயன்றதாகத் தெரியவில்லை. இக்கடினமான சிக்கலைத் தீர்க்கச் சிறந்த வழியாகத் தற்பொழுது கையாளப்பெறும் முறை ஒரு பாத்திரத்தை (அநேகமாக அது நாடகத் தலைவனாக்வேக்ட இருக்கும்) அரங்கில் நிறுத்தி ஒரு நீண்ட தனிமொழிச் சொற் பொழிவை அவன். செய்யுமாறு செய்துவிடுதலேயாம் இதைவிடப் பார்ப்பவர்கட்கு வெறுப்புத் தட்டும் செயல் ஒன்றும் இருத்தற் கில்லை. இம்மாதிரி நேரங்களில் இரண்டு அல்லது மூன்று பாத்திரங் களின் உரையாடலே சிறந்த முறையாகும். ஆனால், அவ்வுரை யாடல் இயற்கையாக அமைந்து நாடகத் தின் உட்கோளை விளக்குவதாக அமையவேண்டும். அவ்வாறின்றிப் பார்ப்பவர்கள் பொருளை விளங்கிக் கொள்வதற்காகவே இவர்கள் உரையாடல் செய்கிறார்கள் என்ற எண்ணம் மனத்தில் தோன்றக் கூடாது இந்த உரையாடலும் மிக நீண்ட நேரம் நடைபெறக் கூடாது முதலில் நாம் அறியவேண்டிய சில இன்றியமையாத செய்திகளை இது தெரிவிக்க வேண்டுமேயன்றி நாட்கம் முழுவதையும் பற்றிப் பேசவேண்டுவதில்லை. பின்னர் நிகழப்போகும் உரையாடல்கள் எவ்வாறு இருப்பினும் முத ற்காட்சியின் இவ்வுரையாடல் நம் கவனத்தை இழுக்கும் முறையில் அமையவேண்டும். இவ்வாறு கூறினவுடன் எதுகைமோனைச் சொற்களால் அது நிரப்பப்படல் iேண்டும் என்பதன்று. ஆராய்ந்து பார்க்கும் பொழுது எதற்காக இது நடந்தது. என்பது தெரியவேண்டுமே தவிர்ச் சாதாரணமாகப் ப்ார்ப்பவர்கட்கு இயற்கையாய் நடைபெறுவது போன்ற காட்சி குழப்பம் இதனையடுத்த இரண்டாவது பகுதியில் நாடகத்தின் இன்றியமையாத குழப்பம் என்ற பகுதி தொடங்குகிறது. இப்பகுதி நன்குவிைளங்குவதாகவும், -ன்னிமையுடிையதாக அழைதல் வேண்டும் காரணகாரியத் தொடிர்புடையனவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/398&oldid=751232" இலிருந்து மீள்விக்கப்பட்டது