பக்கம்:இலக்கியக் கலை.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் - 383 உள்ள வேறுபாட்டை இங்குக் குறிப்பிடவில்லை. இவ்வாறு இன்றித் தனிப்பாத்திரங்களும் வேறுபாடு காட்டும் முறையில் அமைக்கப் பெறுகின்றன. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களுடைய மனோன்மணியத்தில் நடராசனும் பலதேவனும் வேறுபாடு காட்டும் நோக்கத்துடன் அமைக்கப்பெற்ற பாத்திரங்களாவர். அமைதியே வடிவானவன் நடராசன், ஆனால் செயல் செய்வதில் தீரன். வாய்வீரம் பேசும் மடையன் பலதேவன்; ஆனால் ஒன்றும் உருப்படியாகச் செய்து முடிக்க இயலாதவன். துன்பமும் இன்பமும் கலந்து செய்யப் பெறும் நாடகங்களில் இவை ஒன்றுக்கொன்று வேறுபாட்டை விளக்கி நிற்கும். இதனால் ஏற்படும் பயன் பெரி தெனக் கண்ட ஆசிரியர்கள் எல்லைமீறி, இதனைப் பயன்படுத்து தலைக் காண்கிறோம். அச்சந்தர்ப்பங்களில் இவை வலிந்து கொள்ளப்பட்டன என்ற எண்ணம் நம் மனத்தில் தேர்ன்று கிறது. இது ஒரு குறைபாடடே பல சமயங்களில் சாதாரண மக்களை மகிழ்விக்கும் பொருட்டும் இம் முறை எல்லைமீறி ஆளப் படுவதுண்டு. . நாடகக் குறிப்பு நாடக அமைப்பில் காணவேண்டிய மற்றுமோர் சிறந்த் பகுதி உநாடகக்குறிப்பு என்பதாகும். இதனை இக்காலத்து நாடக அங்கதம் என்னுஞ் சொல்லால் வழங்குகின்றனர்.ஆனால் அங்க்த்ம் என்னுஞ் சொல்லுக்குக் குறிப்பு என்னும் பொருனின்மையின் அது பொருந்தாது. பொதுவாகக் குறிப்பு என்பதன்ை நாம் அறிவோம். இருவர் சண்டை செய்து கொண்டிருக்கின்ற்னர் என்று வைத்துக் கொள்வோம். பின்ன்ே குழி ஒன்று இருப்ப்தாகவும் கொள்வோம். குழி இருப்பது தெரியாமல் ஒருவன் அதன் முன்னர் நின்றுகொண்டு தன் எதிர் இருப்பவனை நோக்கி."உன்ன்ைக் குழுவெட்டிப் புதைக் கிறேன் பார்!’ என்று கூறிக்கொண்டே பின்னால் வருகிறான். இவை அனைத்தும் ஒரு நாடகத்தில் நடந்தால்தக்கதொரு நாடக குறிப்பு என்று இதைக் கூறலாம். யாரை நோக்கி இவன் கூறுகிறானோ அவனும், நாடகம் பார்க்கிறவர்களும் பின்னர்க் குழி இருப்பதை அறிவர், ஆனால், பேசுபவன் அதன் இருப்பை அறியாமல் பேசிக் கொண்டே பின்னால் நகர்ந்து அதில் வீழச் செல்கிறான். இந்நிலை யில் அவன் கூறும் மொழிகள் குறிப்பிட்த்தக்கன. தான் குழியில் வீழப்போவதை அறியாத அவன்தான் எதிரில் நிற்பவனை என்று கூறுகிறாள் இத்தகைய ஒரு நிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/404&oldid=751240" இலிருந்து மீள்விக்கப்பட்டது