பக்கம்:இலக்கியக் கலை.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 இலக்கியக் கலை நாடக குறிப்பு என்கிறோம் செயல் அளவில் வேடிக்கை இருப்ப தால் இதனை 'நாடகச் செயற்குறிப்பு என்று கூறுகிறோம். இஃதன்றியும் சில சந்தர்ப்பங்களில் நாடகத்தலைவனும் தலைவியும் பேசிக்கொண்டிருக்கிற ஒருநிலை வருகிறது களவில் இருவருஞ் சந்தித்துப் பேசுகின்றனர். தம்மை ஒருவரும் பார்க்கவில்லை என்று நினைத்துத் தலைவி, எனது தந்தை இந்நிலைலயைக் கண்டால் என்ன சொல்லுவார்?' என்று கூறுகிறாள். அவள் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் தந்தை அவர்களை மறைவில் நின்று கண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருக் கிறார். அவர் நிற்பதைப் பாத்திரங்கள் அறியாராயினும் நாடகம் பார்ப்பவர் காணமுடியும். இந்நிலை 'நாடக சொற் குறிப்பு: எனப்பெறும். சுருங்கக் கூறுமிடத்து ஒரு பாத்திரம் செய்யுஞ் செயலிலும், பேசும் பேச்சிலும் தான் ஒரு கருத்தை உட்கொண்டு. செய்தலோ அன்றிப் பேசுதலோ செய்கிறது. ஆனால், நாடகம் பார்ப்பவர்கட்கு அது வேறு கருத்தை அல்லது பொருளை அறிவிக் கிறது, பார்ப்பவர்களுக்குப் பின் விளைவு தெரியுமாகவின் பாத்திரம் பேசும் பேச்சில் உள்ள தவறு தெரிகிதது. இந் நிலையே நாடகக் குறிப்பு எனப்பெறும். இவ்விரண்டனுள் நாடகச் சொற்குறிப்பு மிகவும் சிறப்புடையது. சொற்குறிப்புப் பல சந்தர்ப்பங்களில் ஆசிரியன் இரட்டுற மொழிதல்' என்னும் வழியைக் கையாண்டு பேசும் பாத்திரங்கட்கு ஒரு பொருளையும், பார்க்கும் மக்களுக்கு, ஒரு பொருளையும், வழங்குகிறான். இவ்வகை அழகு நாடகங்களில் மட்டும் அல்லாமல் காப்பியங்களிலும் இடம் பெறுகிறது. காப்பியங்களிலும் நாடகப் (பகுதிகள் அமைந்திருத்தல் கண்கூடு அப்பகுதிகளில் இவ்வகை அழகு இடம் பெறுகிறது. சூர்ப்பநகை இராவணனிடம் சீதையின் அழகைப் பலபடியாக வருணிக்கிறாள். அவன் மனம் பேதலித்து விட்டான் என்பதை நன்கு அறிந்து உடனே தன் சொற்களை முடிக்க நல்லதொரு வழியை மேற்கொள்கிறாள். இந்தின் சசியைப் பெற்றான் இருமூன்று வதனத்தோன்தன் தந்தையும் உமையைப் பெற்றான் தாமரைச் செங்கணானும் செந்திரு மகளைப்பெற்றான் சீதையைப் பெற்றாய் நீயும் அந்தரம் பார்க்கில் நன்மை அவர்க்குஇலை உனக்கே ஐயா!' (கம்பன். மாரிசன் வதை-75)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/405&oldid=751241" இலிருந்து மீள்விக்கப்பட்டது