பக்கம்:இலக்கியக் கலை.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 387 புகழ்பெற்றது. தற்காலத்தில் இவை ஒன்றினும் சேராத சமுதாய நாடகம் ஒன்றே சிறப்படைந்துள்ளது, பொருத்தங்கள் தமிழ் நாடகங்களுள் சற்றும் போற்றப்படாவிடினும், மேலை நாட்டார் சொல் அளவில் போற்றும் பொருத்தம்' என்பதும் கவனிக்கற்பாலது. நாடகவியல் ஆசிரியர் இதன் தன்மையையும் இந்நாட்டு நாடக அமைதியையும் நன்கு உணர்ந்தவராகலின், - * : * ~ * . பொருத்தம் என்பது ஒற்றுமை உடைமை அஃது இடனும் காலமும் செயலும் எனமூ விதப்படு மென்ப மேற்றிசைவாணர். -(நாடகவியல் : 61) என்ற முறையில் கூறிச் செல்கிறார். மேற்றிசைவாணர் என்ப" என்றாராகலின் கீழ்த் திசையாளர் இதுபற்றி அதிகம் கவலுவ தில்லை. என்பதையும் குறிப்பித்தார். இவ்லுைப்பு முறை அவற்றின் சிறப்பு:நோக்கி அழைந்துள்ளது. முதலாவதாகவுள்ள "இடப் பொருத்தம் என்பது நாடகம் முழுவதும் ஒரே இடத்தில், நிகழ்ந் திருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஆனால், இச் சட்டத்தை மேலை நாட்டாரே கைவிட்டுவிட்டனர். இதனை அடுத்து, சிறப்படைவது கர்லப்பொருத்தம். இதுவும் ஓரளவுதான் கைக்கொள்ளப்படுகிறது. அவல நாடகத்தின் இலக்கணம் வரைந்த அரிஸ்டாட்டில்' அவல நாடகத்தின் நிகழ்ச்சி முழுவதும் ஒரு நாளின் எல்லைக்குள் முடியவேண்டுமென்றார். இச்சட்டத்தையும் இன்றைய நாடாகசிரியர்கள் உதறிவிட்டார்கள். ஆனால், மூன்றாவதாகவுள்ள செயல் பொருத்தம் என்பது நன்கு கவனிக்கப்படவேண்டியதாகும். அதுவும் தற்காலம் தோன்றும் நாடகங்கள். த்ற்கால மக்கள்மன்ம் போலவே பல்வேறுபட்ட பண்புகளைக்கொண்டு விளங்குகின்றன. இதனிடையே செயல் பொருத்தம் இல்லாது போயின் நாடகம் முழுத்தன்மைபெற்று விளங்க இயலாது. சிறு செயல்கள் அனைத்தும் நாடகத்தின் நடுவாகிய பெரு நிகழ்ச்சியில் சென்று கலந்துவிடவேண்டும். இன்றேல் சிக்கல் விழுந்த நூல்போல முழுத்தன்மையற்று விடும். சிறு நிகழ்ச்சிகள். ‘īlā) சேர்ந்தால் ஒரு முழு நாடகம் தானே அமைந்துவிடும் என்ற கருத்தில் இன்று ப்லரும் நாடகம் அமைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/408&oldid=751244" இலிருந்து மீள்விக்கப்பட்டது