பக்கம்:இலக்கியக் கலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் 25 சான்றோர்கள். 'தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் (புறநா. 182) உள்ளமையால் த்ான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது எனும் முடிவிற்கு வருகிறார். தம்முடைய சிந்தனையில் திடுமெனத் தோன்றிய அவ்வறிவொளியின் பயனை, உலகிற்கு உணர்த்த வேண்டும் எனும் உள்ளத்துடிப்பால் அந்தப் புலவர் ஆட்கொள்ளப்பட்டார். இதன்விளைவாகவே, 'உண்டாலம்ம இவ்வுலகம்' எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாட்டினை அவர் படைத்துள்ளார். - இதைப் போன்று, புதுமையைப் புலப்படுத்தும் துடிப்பினால் படைக்கப்பட்டுள்ள இலக்கியம், கலைச்செல்வங்கள் பலவற்றை உலகில் காணலாம். இன்புறுத்தத் தூண்டும் துடிப்பு 'யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' எனும் பரந்த நோக்கினாலும், அருள் உணர்வாலும் சில சமயங்களில், இலக்கியம் படைக்கப்படுகின்றது. ஆன்றோர்களும், அருளாளர் களும், தங்கள் அறிவுமுதிர்ச்சியாலும், வாழ்க்கையில் பெற்ற கனிந்த அனுபவத்தாலும் தாங்கள் அடைந்த மனநலமாகிய (Happiness) இன்பத்தை மற்றவர்களும் அடையவேண்டும் எனும் , நோக்கோடு, இலக்கியம் படைக்கப்படுவதும் உண்டு. -་྾,, அப்பர் பெருமானின் "மாசில் வீணையும் மாலை மதியமும்" எனத் தொடங்கும் தேவாரப்பாடல், அவர் பெற்ற, இறை அனுபவத்தை, 'சேரவாரும் செகத்திரே" என அழைத்து, மக்களுக்கு எடுத்துரைப்பதைப்பேர்ல் அமைந்து இருப்பதைக் கருதுக. 'கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த - குளிர்தருவே" என்த்தொடங்கும் இராமலிங்க அடிகள்ாரின் அருட்பாவும் இந்த எண்ணப்போக்கில் தோன்றியதாகும். திருவள்ளுவருட்ைய திருக்குறள் இத்தகைய உந்துதல் சக்தியால் இயற்றப்பட்டு, நீதிஇலக்கியமாகப் போற்றப்படுகிறது. சுப்பிரம்ணியபாரதியாரின் 'கு யி ல் பாட்டு மாலை மயக்கத்தில் தோன்றிய நெட்டைக்கண்வில், பெற்ற இன்பத்தைப் படிப்பவர்க்குப் பகிர்ந்து அளிப்பதாக அமைந்துள்ளதைக் காண்க, x s: ... . . *- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/41&oldid=751246" இலிருந்து மீள்விக்கப்பட்டது