பக்கம்:இலக்கியக் கலை.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை 896 வேண்டும். அந் நிகழ்ச்சியும் பூரணமாக அமையவேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது. மேலும் வளர்த்துக் சென்றால் பயன் ஒன்றுமில்லை. என்று கூறத்தக்க நிலையில் அது முழுதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத்தன்மை கதை யின் எல்லைக்குள் அமைந்துவிட்டால் அன்றிச் சிறப்பில்லை; மீதியை எமது வெள்ளித்திரையில் காண்க என்பது போல அடுத்த கதையில் விவரிக்கப்படும் என்று கூறுதல் தவறு. இறுதி யில் முழுத்தன்மையும் ஒவ்வொரு பகுதியும் தம்முள் அளவொத்து இருக்கும் இயல்பும் நம் மனத்தில் நன்கு பதியவேண்டும். ஒருநாளில் நடந்த நிகழ்ச்சியும், ஒரு வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சியும் இரண்டும் சிறுகதையில் இடம் பெறலாம். ஆனால் ஒரு வாழ் நாள் கூறும் அளவு மீறிய கூட்ட நிகழ்ச்சியுடையதாகவும் இருத்தல் கூடாது. இற்றைநாள் சிறுகதை ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை நிறைத்துவிட்டால் கதை அமைந்து விட்டதாக நினைக்கின்றனர். கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று ! அன்று!! அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறுந் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் கூறவரும் நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும், தாழ்வும் விளங்கும். நிகழ்ச்சிகள் கொண்ட கதைகள் முடிபைக் கூறியே தீரல் வேண்டும். என்ற இன்றியமையாமை இல்லை. சுபம்' மங்களம் போட்டுக் கதை எழுதிய காலம் நல்ல வேளை யாக முடிந்துவிட்ட்து. ஆனால், கதையிலிருந்து அறிய வேண்டியதை ஒரளவு சுருக்கி ஒரு பாத்திரத்தின் கூற்றாகக் கூறும் பழக்கம் இன்னுஞ் சிலரிடமிருந்து வருகிறது. அதுவும் நீங்கிவிட வேண்டும். திருடன் ஒருவனைப் பற்றிய கதையானால் 'திருடன் தண்டிக்கப் பட்டான் என்று முடிக்க வேண்டியதில்லை. திருடுதல் கெட்டது என்று கூறவேண்டிய வேலை கதைக்கு அன்று. உணர்ச்சிக் கதைகள் இதனை அடுத்து உள்ள கதைகள் உணர்ச்சிக் கதைகள், அதாவது நிகழ்ச்சிக்கு முதலிடம் தராமல் மனித மனத்தைப் படம்பிடித்துக் காட்டச் சிறுகதையைப் பயன்படுத்தும் முறை. தமிழ்நாட்டுச் சிறுகதைகளில் இம்முறை பற்றிய கதைகள் அதிகம் இல்லை. புதுமைப்பித்தன் கதைகளில் மிகச் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/416&oldid=751253" இலிருந்து மீள்விக்கப்பட்டது