பக்கம்:இலக்கியக் கலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இலக்கியக் கலை இணங்க ஒரே வகையான அடிப்படை உள்ளடக்கத்தையும் வெளியீட்டு முறைகளையும் கொண்ட சிற்றிலக்கியங்கள் (பிரபந்தம்) ஏராளமாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தையும் தரமான இலக்கியம் எனக் கருதுவதற்கு இயலாது. நந்திக் கலம்பகம், திருக்கோவையார், கலிங்கத்துப் பரணி, மூவருலா. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், தமிழ்விடு தூது போன்ற ஒருசில சிற்றிலக்கியங்களே சிறப்பு மிகு இலக்கியங் களாகப் போற்றப்படுகின்றன. ஏனையவை போற்றப்படாமைக் குரிய காரணங்களை அறிய முயலுவோமானால், அவற்றிடையே புதுமைக் கவர்ச்சி எனும் பண்பு அமையாமையே பேரளவிற்குக் காரணமாகும் என்பது புலனாகும். "தலபுராணங்கள்' எனும் இலக்கியவகை இன்று ஆர்வத்துடன் மதித்துப் போற்றுவாரற்றுப் போனமைக்கும் இதுவே காரணமாகும் ஒரு சிறந்த புராணத்தின் மாற்று வடிவமாக - வார்ப்பாகவேபல்வேறு தலபுராணங்கள் சிற்சில மாற்றங்களோடு இயற்றப் பட்டமையே, இதற்குக் காரணமாகும். 'பெருமை’ எனும் இயல்பு இலக்கியத்தில் எவ்வாறுஇடம் பெறுகிறது? எனும் எண்ணம் எழலாம். ஓர் இலக்கியத்தில் இடம் ப்ெறும் கருத்துகள், பரந்துபட்ட மனித இயற்கையைச் சிந்திரிப்ப தாகவும் அனைத்துலகக் கண்ணோட்டம் உடையதாகவும் இருந்து பொருள் நயமும், சொல்நயமும் கவர்ச்சிமிகு படிமங்களைக் கொண்டதாகவும் அமையுமானால் அதனைச் சிறப்புடையதாகப் பேர்ற்றுவர். இதனால் பொருண்மை (உள்ளடக்கம்) யில் உயர்ந்த தாகவும், பொதுமைப்பண்பில் சிறந்ததாகவும் புதுமைக் கவர்ச்சி வாய்ந்ததாகவும் விளங்கும் இலக்கியமே பெருமை யுடையதாகக் கருதப்படும் என்பது தெளிவாகிறது. இலக்கியத்தின் இந் நால்வகைப் பண்புகளும் ஒன்றோடு ஒன்று. இணைந்தும் பிணைந்தும் இயங்குகின்றன என்பது கருத்தில் இருத்தத் தக்கது. சங்கப் பாடல்களுக்கு அடுத்த நிலையில் திருக்குறளும், சிலப்பதிகாரமும், தேவார திருவாசகமும், திவ்வியபிரப்பந்தமும், கம்பராமாயணமும் போன்ற இலக்கியங்களும் புகழ் பெற்றுள்ள ம்ைக்குக் காரணம் இந்த நால்வகைப் பண்புகளும் முனைப்பாக அவற்றில் இடம்பெற்றுள்ளமையாகும். " .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/46&oldid=751260" இலிருந்து மீள்விக்கப்பட்டது