பக்கம்:இலக்கியக் கலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இயல்புகள் 31 கம்பனுக்குப்பிறகு தோன்றிய தமிழ் இலக்கியங்களில் குமரகுருபரர், சிவப்பிரகாசர் என்ற இருவர் படைப்புகளும் மிகச் சிறந்தவைதாம் என்றாலும் இந்த இருவரும் அவர்கள் காலத்தில் வளர்த்துவிட்ட புதுமையை நாடாமல் பழைய மரபினாலாகிய பிள்ளைத்தமிழ், கலம்பகம் பதிகம், என்ற வகையில் பாடிச் சென்றமையின் அவர்கள் நூல்கள் அவற்றுக்குரிய இடத்தையோ, மதிப்பையோ பெறாமற்போய் விட்டன. - - இவர்கட்குப்பிறகு முந்நூறு ஆண்டுகளின் பின்னர்த்தோன்றிய பாரதியாரின் கவிதைகளையே பெருஞ்சிறப்பு வாய்ந்த இலக்கிய மாக நாம் போற்றுவதற்குக் காரணம் பாரதியின் பாடல்களில் புதுமை வெள்ளம்பெருக்கெடுத்து ஒடுவதும் பொருண்மையில் அழுத்தமும் புதுமையும் பொலிவுறுவதும், மனிதகுலத்திற்குப் பயன்படத்தக்க விழுமிய எண்ணங்கள் இழையோடிச் செல்வதும் அடிப்படைக்காரணங்களாகும். இவை மூன்றும் ஒன்றாகச் சேர்ந்து பாரதியின் பாடல்களுக்கும் பெருமையைத் தேடிக்கொடுத்துள்ளன. இருவகைப் பாகுபாடு இலக்கியத்தின் இயல்புகளை இருவகையாகப் பாகுபடுத்தலாம் முன்னரேகண்ட பொது சிறப்பு எனும் பாகுபாட்டில் இருந்து இது வேறுபடுகிறது. இலக்கியத்தின் அகத்துறு (intrinsic) பண்புகள் புறத்துறு (Intrinsic) பண்புகள் என இவற்றை வேறுபடுத்திக் காட்டலாம். அதாவது இலக்கியத்தின் பொருண்மையில்’ (உள்ளடக்கத்தில்) காணப்படும் உள்ளார்ந்த இயல்புகளையே அகத்துறு பண்புகள் எனச் சுட்டுவர். இலக்கியத்தின் வடிவத்தில் புறத்தோற்றத்தில் காணப்படும் இயல்புகளையே புறத்துறு' பண்புகள் எனக் குறிப்பிடுவர். . . . " - பொதுவாக இலக்கியத்தைப் பண்பாட்டு நிறுவனமாகக் கருதுவர். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தினுடைய சிறப்பு இயல்புகளை மொழியின் மூலம் புலப்படுத்துவதாக-வெளிப்படுத்துவதாக இலக்கியம் அமைகிறது! இதனால், அச்சமுதாயம் பெற்றுள்ள மரபுவழிச் செல்வங்களுள் ஒன்றாக இலக்கியம் கருதப்பெறுகிறது. ஒவ்வோர் இலக்கியத்தின் பின்னணியிலும் அதன் ஆசிரியன் (படைப்பாளி) மறைந்து நிற்கிறான். அவனுடைய இயல்பு சமூகச்சூழல் எனும் இரு பேராற்றல்களால் அவன் உந்தப்படுகிறான். அந்த உந்துதலினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/47&oldid=751261" இலிருந்து மீள்விக்கப்பட்டது