பக்கம்:இலக்கியக் கலை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இலக்கியக் கலை கலையுணர்வும் அடிப்படையாக அமைகின்றன. இதனால்தான் ஒர் இலக்கியப் படைப்பாளனின் நடை ஒரு மனிதனுடைய மேலுடை போன்றது அன்று. அது அவனுடைய உடலோடு உடலாக ஒட்டிக்கொண்டுள்ள தோல் போன்றது என்பர். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே நடைதான் ஆசிரியன் எனும் முதுமொழியும் தோன்றியுள்ளது இங்கு நினைவுகூரத் தக்கதாகும். - ஓர் இலக்கியத்தின் நிலை பேற்றிற்குரிய காரணிகளுள் இறுதியாகக் கண்ட உலகப் பொது மைப்பண்பும், நடைநலம் சார்ந்த க்லைத்திறனும் முக்கியமானவை. இவற்றுள், உலகப் பொதுமை ஆசிரியனுக்குப் புறத்தேயுள்ள பொருள்பற்றியது. இலக்கியத்தின். 'நடைநலஞ்சார்ந்த கலைத்திறன் அவனுடைய உள்ளத்தே உறையும் பண்பு நலனை அடிப்படையாகக் கொண்டது. அது அவனுடைய ஆளும்ையாக வெளிப்படுகிறது. முந்தையது உலகப் பொதுமையாக இருக்கிறது; அடுத்தது தனிமனிதனுடைய மனப்புண்பாட்டைச் சார்ந்துள்ளது. மக்கள் இன்த்தில் ஆழ்ந்த கருத்துகளும் ஆற்றல்மிகு உணர்ச்சிகளும் முந்தையதில் அமைகின்றன. பிந்தியதில் அக்கருத்துகளின் தன் அனுபவம்' எனும் வண்ணத்தைக் குழைத்து கலை வடிவமாக" வெளிப்படுத்தும் ஆசிரியனுடைய வாழ்க்கையும், ஆளுமையும் இணைந்தும் இயைந்தும்.இயங்குகின்றன. . - (உ), இன்புறுத்தல் . - இலக்கியத்தின் தனிப்பெரும் பொதுப்பண்பு, மகிழ்வூட்டு *... . . ; ; :# عامي : ... ... * - ۹ سر --- - - fré5 வத் 'நெஞ்சை அள்ளும் நீர்மை இலக்கியத்தில் உயிர்; ஆன்ர்ல் அந்நீர்மை சீர்மைக்குப் பயன்படாவிட்டால் இலக்கியம் '. தரம் குறைந்த இலக்கிய மாகிவிடும். இலக்கியும் தம் உள்ளத்தைக் கவருகிறது; நவில்தொறும் நூல்நயம் ப்யப்பதே, "அதன் கவர்ச்சிக்குக் காரணமாகும், நம் உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சியைப் ப்ெருதச் செய்து நம்ம்ை விய்ப்பில் ஆழ்த்தி, ஒருவகை இன்பவுணர்வால் நம் உள்ளத்தைப் பூரிப்படையுமாறு தூண்டி இன்பநிலையை அடையுமாறு செய்வது இலக்கியம். இலக்கியத்தைக் சுற்பதனால் தாம் பெறும் பயன் யாது? இலக்கியத்தைப் படிப்பதனால் ஒரு வகையான இன்பத்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/56&oldid=751271" இலிருந்து மீள்விக்கப்பட்டது