பக்கம்:இலக்கியக் கலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

til புலநாவிற் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது' என்றும் 'தொல்லாணை நல்லாசிரியர், புணர்கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின், நிலந்தரு திருவின் நெடியோன் என்றும் 'முதுமொழி நீராப்புலநா உழவர், புதுமொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனலூர" என்றும் வரும் அடிகள் தமிழர்கள் எவ்வாறு புதிய இலக்கியங்களை அனுபவித்தனர் என்பதை நமக்கு அறிவிக் கின்றன. மேலும் கலி 35ஆம் பாட்டில் உள்ள அடிகள் தமிழ்ப் புலவர் கள் மட்டும் அல்லாமல் சாதாரண மக்களும்கூட இலக்கிய அனுபவம் பெற்றிருந்தனர் என்பதைக் கூறுகின்றன. இவ்வாறு இத் தமிழர்கள் இலக்கியத்தை அனுபவிப்பதற்குச் சில சட்ட திட்டங்களையும் வரன்முறைகளையும் அமைத்திருக்காமல் அனுபவிக்க முடியுமா? அவர்கள் அமைத்திருந்திருப்பின் அச்சட்டங்களே அவர்கள் கண்ட இலக்கியத் திறனாய்வாக இருந்திருக்கும். ஆனால் இன்று அது நமக்குக் கிடைக்கவில்லை தொல்காப்பியமும் பெரிய அளவில் செய்யுளியல் என்று வகுக்கிறது. இவ்வியலில் கவிதை இயற்ற இலக்கணம் பேசப்படுகிறது. கவிதையை அனுபவிப்பதற்கும் அதன் குறைவு நிறைவுகளை ஆராயவும் இச்செய்யுளியல் பயன் படாது. பின்னர் வந்த இலக்கணங்களும் கவிதையை அனுபவிப்பது எவ்வாறு என்பதுபற்றி ஒன்றுங் கூறவில்லை. இவற்றால் தமிழில் திறனாய்வு நூல் என்று ஒன்றுந் தோன்றவில்லை போலும் என்று கூறத் தோன்றுகிறது. புத்தம்புதிய கலைகள் மெத்த வளரும் மேனாடுகளில் இவ்வகை நூல்கள் மிகுதியுந் தோன்றியுள்ளன. கிறித்து நாதர் பிறப்பதற்கு முன்னரே வளம்பெற்ற கிரேக்க மொழியில் பெரியாரான அரிஸ்டாடில் திறனாய்வுநூல் ஒன்றை எழுதினார். முதன்முதல் "பாவியல்" என்ற சொல்லைப் பயன்படுத்தினவரும் அவரே அவர் ஆக்கிய சட்டங்கள் பெரும்பான்மை உலகத்தின் ്വജിഥrി களிலும் தோன்றும் இலக்கியங்கட்குப் பொதுவாகவும், சிறுபான்மை - கிரேக்க, இலக்கியங்கட்கு மட்டும் சிறப்பாகவும் அமைந்தன. ஆங்கில மொழியில்கூடப் பன்னெடு நாட்கள் திறனாய்வுக்கு அடிப் படையாக அமைந்ததும் அரிஸ்டாடிலின் இந்நூலேயாகும். ஒப்பற்ற இலக்கியங்கள் நிறைந்த தமிழ்மொழியில் இக்குறையைப் போக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/6&oldid=751275" இலிருந்து மீள்விக்கப்பட்டது