பக்கம்:இலக்கியக் கலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 5 இலக்கிய வகை இலக்கியம் மனித இனத்தின் அனைத்துலக மொழியாகும், அது குறிப்பிட்ட பண்பாட்டு வரையறைகளையும், கட்டுப் பாடுகளையும் கடந்து, அனைத்துலக நோக்கோடு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளையும் எண்ணங்களையும் எழுச்சிகளையும், வேட்கைகளையும் குறிக்கோள்களையும் எதிரொலிக்கிறது. வரை யறுத்துக் கூற இயலாத நிலையில், வாழ்க்கையும் மனித உள்ளமும் சந்திக்கும் இடமாக இலக்கியம் விளங்குகிறது. - மொழியைக் கருவியாகக் கொண்டு, தன்னுடைய வடிவத்தை இலக்கியம் பெறுகிறது. அதன் உட்பொருளை வாழ்க்கை தந்துதவுகிறது. படைப்பாளி வாழ்க்கை எனும் மூலப்பொருளோடு, கலையழகு எனும் வண்ணத்தைக் கலந்து, கற்பனை எனும் மெருகிட்டு இலக்கியத்தைப் படைக்கின்றான். இந்த இலக்கியத்தை வடிவ அமைதியைக் கொண்டும். உணர்த்தும் பொருளினைக் கொண்டும், கருத்தை உணர்த்தும் முறைகளைக் கொண்டும் பலவகையாகப் பாகுபடுத்துவர். அயல்பு நிலைப் பாகுபாடு (Genras) இலக்கியத்தைத் தூய இலக்கியம் (Pure Literature) சார்பு அல்லது செயற்பாட்டு இலக்கியம். (Applied Literature) என்ச்சில சமயங்களில் வகைப்படுத்துவது உண்டு. 'துய சார்பு இலக்கியம் , , இலக்கியத்தின் இயல்புகள் யாவும் முழுமையாக, فلاهي பெற்றுள்ள 'படைப்பு இலக்கியத்தையே துய இலக்கியம்' என்பர். கற்பனைக்கோ, கலையழகிற்கோ இடம் தராமல், கருத்துகளை அறிவுறுத்தும் பாங்கில் அமைந்தவற்றைச் சார்பு இலக்கியம்'ன்னும் பெயரால் சுட்டுவர். இவ ற்றின் வேறுபாட்டைப் பாரதியாரின் குயில் பாட்டையும், கபிலர் அகவலையும். கொண்டு தெளியலாம், கபிலருடைய அகவலில், கருத்தை வெளிப்படுத்தும் முறையில், இலக்கிய இயல்புகள் சில இடம் பெற்றுள்ளதை மறுக்க இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/65&oldid=751281" இலிருந்து மீள்விக்கப்பட்டது