பக்கம்:இலக்கியக் கலை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய Ꮬ ☾öyü * 49 பாரதியாரின் படைப்பில், வெளியீட்டுமுறை எனும் அளவிலேயே நம்முடைய கருத்தைக் கவருகிறது. யாதோ ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்குரிய கருவியாகப் பாரதியாரின் வெளியீட்டுமுறை பயன்படுத்தப்படவில்லை. இதனால், குயில் பாட்டில் கலையுணர்வு எனும் கோட்டைக்கு உள்ளேயே நாம் சுற்றிவருகிறோம்! கலையுணர்வுக் கோட்டைக்குப் புறத்தே உள்ள கருத்தோட்டம்' எனும் வெட்டவெளிக்குப் பாரதியின் படைப்பு நம்மை'இழுத்துச செல்லவில்லை: இந்தப் பண்புதான் தூய இலக்கியத்தை இனங்கண்டுகொள்ள உதவுகிறது; * 。。。 சார்பு இலக்கியமாகிய கபிலர்சுவலில் ஆசிரியனுடைய நோக்கத்தைப் புறக்கணித்து ஒருபுறம் ஒதுக்கி விட்டால்தான், நாம் அதில் இலக்கிய இன்பத்தை நுகர முடிகிறது. தூய இலக்கியமாகிய குயில்பர்ட்டினைப் படித்து இன்புறுவதற்கு இசசெயல்முறை தேவைஇல்லை. ஏனெனில் தூய இலக்கியத்தின், வெளியீட்டு முறையே ஆசிரியனுடைய நோக்கமாகவும் இலக்கியப் பண்பாகவும் அமைகிறது. இந்த அடிப்படை இயல்புகளைக் கருத்தில் கொண்டே, பொதுவாக இலக்கியம் எனப் பேசுகிறபொழுது எல்லாம், நாம் தூய இலக்கியத்தையே சுட்டுகிறோம் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். l அறிவு ஆற்றல் இலக்கியம் இதைப்போன்றே, இலக்கியத்தை மற்றொரு வகையாகவும் பாகு படுத்துவர். மனித மனத்தில் உள்ள அறிவுக்கூறு, உணர்ச்சிக் கூறு ஆகிய இரண்டையும் தனித்தனியே முனைப்பாக வெளிப் படுத்தும் பண்பு இலக்கியங்கள் இடையே காணப்படுகின்றன. @55 G5srāālā), ‘ology gaváàush' Litetature of Knowledge) எனவும் ஆற்றல் இக்கியம் (Literature of power) எனவும் ஆங்கிலத் திறனாய்வாளரான குவின்சி (De Quincey) இலக் கியத்தை வகைப்படுத்தியுள்ளார். அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது அறிவு இலக்கியம் என விளக்கம் தருவர். மனிதனின் அறிவைத் தூண்டி. நெறிப்படுத்தும் நீதி நூல்களும் மக்களை இணங்குமாறு தூண்டும் வகையைச் சேர்ந்த இலக்கியங்களுக்கும் கருத்தே முதன்மையானது ஆகும் இவற்றுள், இவை படைக்கப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்துவன கருத்துக்களேயாகும். இதில் @,一4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/67&oldid=751283" இலிருந்து மீள்விக்கப்பட்டது