பக்கம்:இலக்கியக் கலை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. இலக்கியக் கலை பெயர் கண்டான் தமிழன். 'முல்லையுங் குறிஞ்சியும் முறைமை யில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும் என்று கூறியவனும் இவனே. இங்ங்னம் ஐவகை நிலம்வகுத்த தமிழனுடைய அனுபவம் அறிந்து மகிழற்குரியது. உலகில் எங்குத் தேடினாலும் இவ்வகைப் பகுப்பைத்தவிர வேறு காண்டல் இயலாது என்பது இன்றும் உண்மையன்றோ? இவ்வகை நிலங்களைப் பற்றிக் கூறப் புகுங்கால் மரபு பிறழாமல் கூறவேண்டும் என்று பழந்தமிழன் கருதியதில் தவறு ஒன்றுமில்லை. பாலை நிலத்தைக் கூ றவேண்டிய இடத்தில் தாமரைத் தடாகத்தை வருணித்தால் அதில் மெய்ம்மை இல்லாது போவதுடன் என்ன உணர்ச்சியைக் கவிஞன் கொணர வேண்டும் என்று o நினைக்கிறானோ அதுவும் இல்லாமல் போய்விடும். இந்நிலை ஏற்படுவதைச் சிலர் அறியாமல் மயங்கிக் கூறிவிடுவர் என்ற காரணத்தால்தான் மரபு வகுக்கப்பெற்றது. மரபு வகுக்கப் பெற்றமையால் இலக்கியம் சிறந்ததே தவிர அழகு கெடவில்லை. இதோ பாலை நிலத்தைப் பற்றிய ஒரு வருணனை : வறியவன் இளமைப்ோல் வாடிய சினையவாய்ச். சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி யார்க்ண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடும் மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின் அலவ்ற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக் கொலைய்ஞ்சர் வினைவரால் கோல்கோடி யவன் நிழல் உல்குபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்." (கலி. 10) இளமையில் வறுமையுடையவன் உடம்பைப்போல் வாடி, அற்பனுடையசெல்வம்போல் தன்னிடம் வந்தவர்கட்கு நிழல் கூட உதவாமல், அதிகமாகத் தீமை செய்து இகழ் சம்பாதித்த வனுடைய முடிவைப்போல் வேரோடு ம்ரம் வெம்பி அழியுமாறு கதிரவின் காய்தலின் குடிகள் அலறுமாறு வரி வசூலித்துக் கெர்லைக்கஞ்சாத மன்னனுடைய குடைநிழலில் வாழ்பவரைப் ப்ோல்காய்ந்து போன மரம் என்பது இதன் பொருளாம். மரப் சிறிதும் பிறழாமல் கூறப்பெற்ற கவிதைதான் இது. ஆனால், பொருள் அழகிலோ, கவிதை அழகிலோ, ஒசை அழ்கிலோ ஒரு சிறிதும் குறையாமல் இருத்தல் நேர்க்கற்பல்து. சகாராப் பாலைநிலத்தை மன்த்தில் நினைந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/74&oldid=751291" இலிருந்து மீள்விக்கப்பட்டது